வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச்செயல் அல்ல.. போலீசுக்கு குட்டு வைத்த கோர்ட்..!

டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு, கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை அடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, பொது ஒழுங்கை பாதித்ததாகக் கூறி தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாக கருத முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்தார். குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற நடத்தப்படும் அமைதியான போராட்டங்களை குற்றச் செயலாக கருத முடியாது என்றும் உண்மையில் இந்த கடைகள் மூடப்படுவதற்கு பதிலாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

போராடுவோர் மீது குற்றவியல் வழக்குகளை பதிவு செய்வது ஜனநாயக உரிமைக்கு எதிரானது என்று கூறிய நீதிபதி, மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: #BREAKING: வெளியானது நீட் தேர்வு முடிவுகள்.. இணையதள வாயிலாக காண ஏற்பாடு..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी