தமிழகம் முழுவதும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போதைபொருள் விற்பனையாளர்கள், கடத்தல்காரர்கள் என போதைக்கு துணையாக உள்ள அனைவரையும் கைது செய்து வருகின்றனர். சமீப காலமாக குற்றசம்பவங்கள் அதிகம் கவனம் பெற துவங்கி உள்ளது. போதைப் பொருள் நுகர்வு கலாச்சாரமே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் அரசு மீது பழி சுமத்தி வருகின்றன.

இந்நிலையில் போலீசாருக்கு குற்றவாளிகளை பிடிப்பதற்கும், போதைப்பொருள் விற்பனையை தடுப்பது குறித்தும் அழுத்தம் அதிகமாகி உள்ளது.இதன் காரணமாகவே தமிழகம் முழுவதும் போலீசார் அலார்ட் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களின் அஜாக்கிரதை.. நொடியில் பறிபோன உயிர்.. பரங்கிமலையில் சோகம்..!
தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தவும், கஞ்சா பயிறிடுவதை தடுக்கவும் போலீசார் அதி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கஞ்சா ஆப்ரேஷன் 1.0 வில் ஆரம்பித்து கஞ்சா ஆப்ரேஷன் 2.0, கஞ்சா ஆப்ரேஷன் 3.0, கஞ்சா ஆப்ரேஷன் 4.0 என அது நீண்டது. இதில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் மற்றும் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் பெரும்பாலும் கஞ்சா விற்பனை தடுக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை அருகே கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபர் ஒருவரை நண்பர்களே அடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தரமணி மசூதி அருகே அமர்ந்து இருந்த தரமணி கென்னடி தெருவை சேர்ந்த 25 வயதான அஸ்வினை தரமணி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த 24 வயதான மோகன், 23 வயதான சங்கர், மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த 19 வயதான பரத் ஆகிய மூவரும் மது அருந்த அழைத்ததாகவும், அதற்கு அஷ்வின் மறுப்பு தெரிவித்த நிலையில் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து தரமணி ரயில் நிலையம் அருகே உள்ள காலி மைதானத்திற்கு சென்ற அனைவரும் அங்கு சென்று மது அறுந்தியுள்ளனர். பின்னர் திட்டம் தீட்டியது போன்று மூவரும் ஒன்று சேர்ந்து அஸ்வினை கத்தியால் சரமாரி வெட்டி படுகொலை செய்துள்ளனர். கொலை செய்த பின்பு மோகன், சங்கர், பரத் ஆகிய மூவரும் அங்கிருந்து ஆட்டோவில் கிளம்பி பள்ளிக்கரணை குளத்தில் மூன்று கத்தியை வீசி விட்டு பின்னர் தரமணியில் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

தற்பொழுது சரணடைந்த மூவரையும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கஞ்சா விற்பனை போட்டியின் காரணமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பூஜை அறையில் இருந்து பற்றிய தீ.. கொளுந்து விட்டு எரிந்த பங்களா வீடு.. உடல்கருகி இறந்த முதிய தம்பதி..!