• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டெல்லி முதல்வரானார் ரேகா குப்தா..! 6 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்பு..!

    டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா மற்றும் பல் டாக்டர் உள்ளிட்ட 6 பேர் கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
    Author By Senthur Raj Thu, 20 Feb 2025 15:22:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    delhi-cm-cabinet-ministers-swear in

    டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    cabinet ministers

    முதல்வருடன் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து தாவிய ஒருவர், பல் டாக்டர் உள்ளிட்ட 6 பேர் கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர். ரேகா குப்தாவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெ.பி. நட்டா, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: டெல்லி சட்டசபை புதிய சபாநாயகர் பாஜகவின் விஜேந்தர் குப்தா.. 'ஆம் ஆத்மி' சபாநாயகரால் நீக்கப்பட்டவரை தேடி வந்த பதவி..!

    4-வது பெண் முதல்வர் 

    இதற்கு முன்னாள் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸின் ஷீலா தீட்சித், ஆம் ஆத்மியின் அதிஷி சிங் ஆகியோர் டெல்லியின் பெண் முதல்வர்களாக இருந்துள்ளனர். அந்த வரிசையில் ரேகா குப்தா டெல்லியின் 4-வது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    cabinet ministers

    6 கேபினட் அந்தஸ்து அமைச்சர்கள்

    முதல்வர் ரேகாவுடன், பாஜக எம்எல்ஏக்களான பர்வேஷ் வர்மா, மஞ்சிந்தர் சிங் சிர்சா, கபில் மிஸ்ரா, ஆஷிஷ் சூட், பங்கஜ் குமார் சிங் மற்றும் ரவிந்தர் இந்த்ராஜ் சிங் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-

    பர்வேஷ் சாகிப் சிங் வர்மா 

    டெல்லி அரசியலில் முக்கியமான ஜாட் சமூக பிரதிநிதியாக பர்வேஷ் வர்மா அறியப்படுகிறார். சமீபத்திய டெல்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பின்பு, மிகவும் முக்கியமான நபராக மாறினார்.

    முதல்வர் பதவிக்கான போட்டியில் அவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. கடந்த 2014 - 2024 வரை பர்வேஷ் மேற்கு டெல்லியின் மக்களவை உறுப்பினராக இருந்தார். தற்போது பேரவைத் தேர்தலில் வென்று டெல்லி கேபினட் அமைச்சராகியுள்ளார்.

    கபில் மிஸ்ரா

    டெல்லி பேரவைத் தேர்தலில் கரவால் நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மனோஜ் குமார் தியாகியை 23,355 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார் கபில் மிஸ்ரா. கடந்த 2015 தேர்தலில் இதே தொகுதியில் மிஸ்ரா ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அரவிந்த் கேஜ்ரிவால் அமைச்சரவையில் டெல்லி அரசின் நீர்வளத்துறை அமைச்சராக கபில் மிஸ்ரா இருந்தார். தனது சக அமைச்சரான சத்யேந்தர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியதால் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    cabinet ministers

    மஞ்சிந்தர் சிங் சிர்சா

     பாஜகவின் மஞ்சிந்தர் சிங் சிர்சா டெல்லி பேரவைத் தேர்தலில் ராஜவுரி கார்டன் தொகுதியில் வெற்றி பெற்று தனது மறுவருகையை பதிவு செய்துள்ளார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் தன்வதி சந்தேலாவை சுமார் 18,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த 2020 தேர்தலில் அவர் இதே தொகுதியை சந்தேலாவிடம் இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்து.

    ஆஷிஷ் சூட்

    டெல்லி முதல்வர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஆஷிஷ் சூடும் ஒருவர். டெல்லி அரசியலில் மிகவும் பிரபலமான ஆஷிஷ், இந்தப் பேரவைத் தேர்தலில் ஜானக்பூரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பர்வீன் குமாரை 18,766 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்திருந்தார். இவர் பாஜகவின் ஜம்மு காஷ்மீரின் இணை பொறுப்பாளராவார்.

    பங்கஜ் குமார் சிங்

    முன்னாள் டெல்லி மாநகராட்சி (எம்சிடி) ராஜா மோகன் சிங்-ன் மகனான பங்கஜ் குமார் சிங் வார்டு கவுன்சிலராக இருந்துள்ளார். அடிப்படையில் பல் மருத்துவரான இவர் டெல்லி மாநகராட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். முதல் முறை எம்எல்ஏவான பங்கஜ் குமார் சிங், விகாஸ்புரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மஹிந்தர் யாதவை 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

    ரவிந்தர் இந்த்ராஜ் சிங்

    டெல்லி பாஜகவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ரவிந்தர் இந்த்ராஜ் சிங் பாவ்னா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் ஆம் ஆத்மி வேட்பாளர் ஜெய் பகவான் உப்கரை 31,000 வாக்குகளில் வென்றிருந்தார். பாஜகவின் பட்டியலின மோர்சாவின் உறுப்பினரான ரவிந்தர் நீண்ட காலமாக பட்டியல் சமூகத்துக்காக பணியாற்றி வருகிறார்.

    இதையும் படிங்க: பதவி ஏற்றார் பாஜகவின் ஒரே பெண் முதல்வர்..! பிரதமர் மோடி நேரில் வாழ்த்து..!

    மேலும் படிங்க
    ஒரு வேளை இருக்குமோ?... பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்... கதறும் அறிவாலய அடி கற்கள்...!

    ஒரு வேளை இருக்குமோ?... பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்... கதறும் அறிவாலய அடி கற்கள்...!

    அரசியல்
    ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் தேர் திருவிழா...! ஓசூருக்கு உள்ளூர் விடுமுறை..! முழு விவரம்..!!

    ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் தேர் திருவிழா...! ஓசூருக்கு உள்ளூர் விடுமுறை..! முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்...! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!!

    20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்...! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு செம்ம ஷாக்... செங்கோட்டையனின் திடீர் மனமாற்றம்... தவெகவிற்கு அடுத்தடுத்து அடி...!!

    விஜய்க்கு செம்ம ஷாக்... செங்கோட்டையனின் திடீர் மனமாற்றம்... தவெகவிற்கு அடுத்தடுத்து அடி...!!

    அரசியல்
    ஈரான் மீதான தாக்குதல்... உடனடியா நிறுத்தணும்... CPM கடும் கண்டனம்..!!

    ஈரான் மீதான தாக்குதல்... உடனடியா நிறுத்தணும்... CPM கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா முதுகில் குத்திய OPS..! பியூஷ் கோயல் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    ஜெயலலிதா முதுகில் குத்திய OPS..! பியூஷ் கோயல் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share