சூடானின் டார்பூரில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்வு முகாமை சூடானிய துணை ராணுவக் குழு ஒன்று ஏப்ரல் மாதம் கைப்பற்றியபோது 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சூடானின் டார்பூரில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்வு முகாமை சூடானிய துணை ராணுவக் குழு ஒன்று ஏப்ரல் மாதம் கைப்பற்றியுள்ளது. தாக்குதல் நடப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பு சூடானின் மேற்குப் பகுதியான டார்பூரில் உள்ள ஜம்சாம் முகாமில் உள்நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்த கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். ஏப்ரல் 11 - 13ம் தேதி வாக்கில் முகாமைக் கைப்பற்றிய சூடானின் துணை ராணுவக்குழு, கிட்டத்தட்ட பசி மற்றும் பட்டினியால் வாடிக்கொண்டிருந்த 1000 பேரை கொன்றதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
முகாமில் தங்கியிருந்தவர்களை கொல்வதற்கு முன்பாக ம்சாம் முகாமுக்கு உணவு மற்றும் பொருட்களை நுழைவதை விரைவு ஆதரவுப் படைகள் தடுத்ததாகவும் ஐ.நா.வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முகாமில் இருந்து சூடானிய துணை ராணுவத்திடம் இருந்து தப்ப முயன்ற 319 பேர் துடிதுடிக்க தூக்கிலிடப்பட்டதாகவும், ஒரு அறையில் பதுங்கியிருந்த 8 பேரை துணை ராணுவனத்தினர் சுட்டுக்கொன்றதாகவும் அங்கிருந்து தப்பிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எலான் மஸ்க் நிறுவனத்திற்கு ரூ. 1,260 கோடி அபராதம்!! என்ன தப்பு பண்ணாரு தெரியுமா?
முகாமிற்குள் கொலைகள், கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் கடத்தல்கள் போன்ற குற்றச்சம்பவங்கள் நடந்ததாகவும் தப்பிப்பிழைத்தவர்கள் தங்களது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். முகாமில் இருந்து சூடானிய துணை ராணுவ படையினரின் சித்திரவதையில் இருந்து தப்பிய 155 பேர் ஜூலை 2025ம் ஆண்டு அளித்த சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு, ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க் 18 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு டார்பூரில் தொடங்கிய போருக்குப் பிறகு, அல் ஃபாஷர் நகரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தெற்கே உள்ள ஜம்ஜாம் முகாம் முதலில் இடம்பெயர்ந்தவர்களுக்காக நிறுவப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் அந்த நகரத்தில் ஏற்பட்ட வன்முறை, பெரும்பாலும் ஆப்பிரிக்க பழங்குடியினரைச் சேர்ந்த இடம்பெயர்ந்தவர்களால் முகாம் நிறைந்தது.
கடந்த ஆண்டு இறுதியில் முகாமில் மோசமான நிலைமை நிலவியது. மேலும் சூடானிய துணை ராணுவத்தினர் உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் எரிபொருள் முகாமுக்குள் நுழைவதைத் தடுத்தனர். இதனால் ஜனவரி மாதத்திற்குள் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துணை ராணுவத்தினரின் இந்த செயலால், சர்க்கரை, உப்பு, எண்ணெய் போன்ற அனைத்து உணவுப் பொருட்களும் தீர்ந்துவிட்டதால் முகாமில் இருந்த பல்வேறு குடும்பத்தினர் வேர்க்கடலையின் ஓடுகளைச் சாப்பிட்டு உயிர் வாழ்த்து வந்ததாக கூறியது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு குட் நியூஸ்... இலவச லேப்டாப் எப்போது கிடைக்கும்?... வெளியானது முக்கிய அறிவிப்பு...!