அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சுந்தரராஜ் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனை நிறைவு, வேட்பாளர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 48 லட்சத்தி 3000 ரூபாயை தேர்தல் தாசில்தார் அலுவலகம் கொண்டு சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முப்பளிப்வெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் இவர் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீடு மற்றும் அவரது மகன் வீடுகளில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமானவரித்துறையினர் செய்த சோதனையில் 4803000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அதிமுகவிற்கு 1996 நிலைதான் ஏற்படும்! தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடி கணிப்பு!
முதலாவதாக சுந்தர்ராஜன் வீட்டு காம்பவுண்ட் சுவர் மேற்கு திசையில் ஒரு சூட்கேஸில் 500 ரூபாய் கட்டுகளாக வீசப்பட்ட 14 லட்சம் ரூபாயும் மற்றும் சுந்தர்ராஜனின் மகன் வீட்டு காம்பவுண்ட் சுவற்றிற்கு கிழக்கு திசையில் வீசப்பட்டிருந்த 500 ரூபாய் கட்டுகள் சுமார் 6 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயும் கண்டறியப்பட்டது. இந்தத் தொகைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இந்த பணம் எங்கள் வீட்டிற்கு வெளியே இருந்து எடுத்ததால் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சுந்தர்ராஜ் தரப்பில் வருமானவரித்துறைஇன்றிடம் கூறியுள்ளனர்.
மீதமுள்ள 27,15,000 ரூபாய்க்கான கணக்குகள் தங்களிடம் இருப்பதாகவும் அதை அதிகாரிகளிடம் காட்டி பெற்றுக் கொள்ள இருப்பதாகவும் கூறி இருக்கின்றனர். சோதனை முழுமையாக நிறைவு பெற்றதை தொடர்ந்து பணம் தேர்தல் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10 முறை தோற்ற சேலத்துக்காரர்! எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேரடி சவால்!