வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

சூடு பிடிக்கும் கரூர் சம்பவம்… ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் தொடங்கியது தீவிர விசாரணை…!

கரூர் துயரச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதலாக அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதலாக 8 அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். விசாரணையை விரைந்து முடிக்கும் வகையில் குழு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களைப் போலவே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை மிகவும் உற்சாகமாக நடத்தி வந்தார். அவரைக் காண அலைக்கடலென மக்கள் குவிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வந்தது.

கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வந்தார். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக கரூரில் நடந்த நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்டு நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் ஆணையம் அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அது மட்டுமல்லாது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் உருவாக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியது. கூடுதல் உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக எட்டு பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் கரூர் சம்பவம்… தாராளமா செய்ங்க! கிரீன் சிக்னல் காட்டிய நீதிமன்றம்…!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை விரைந்து முடிக்கும் வகையில், ஐஜி தலைமையிலான குழுவில் கூடுதலாக 8 அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கவின் கொலை… பெண்ணின் தந்தை போட்ட மாஸ்டர் பிளான்! தோண்ட தோண்டக் கிடைக்கும் பகீர் தகவல்

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी