இந்த மாத இறுதியில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர உயர்மட்டக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பொது விவாதத்தில் உரையாற்ற மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா. பொதுச் சபையின் 80வது பொதுச்சபை கூட்டம் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும். உயர்மட்ட பொது விவாதம் செப்டம்பர் 23 முதல் 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பாரம்பரிய முதல் பேச்சாளராக பிரேசில் முதல் பாரம்பரிய பேச்சாளரான பிரேசில் தலைவர் பேசவுள்ளார். அவரைத் தொடர்ந்து செப்டம்பர் 23ம் தேதி அன்று அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக தலைவர்களிடையே ஐ.நா. பொதுச்சபை மேடையில் உரையாற்றுகிறார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே ஐ.நா.வில் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக உரையாற்றவுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்கா வர்த்தக போர் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், ஐ.நா.வில் டிரம்ப் நிகழ்ந்தவுள்ள உரையை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன. இந்நிலையில், இந்த பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியாவும் பங்கேற்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பால் அந்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. இந் நிலையில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றால் அங்கு டிரம்பை சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க: வெள்ளத்தால் சிதைந்த வட மாநிலங்கள்! நிவாரணம் கோரும் மாநில அரசுகள்...பிரதமர் மோடி DIRECT VISIT
இதனால் இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஜூலை மாதம் வெளியிடப்பட்ட பேச்சாளர்களின் பட்டியலில், பிரதமர் மோடி செப்டம்பர் 26ம் தேதி உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமரின் தீபாவளி பரிசு! GST சீர்திருத்தத்தை புகழ்ந்து தள்ளிய நயினார் நாகேந்திரன்