வங்கதேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக மனஸ்தாபம் இருந்து வருது. காரணம், 1971-ல நடந்த விடுதலைப் போர். இந்தப் போரில் பாகிஸ்தான் ராணுவத்தால் வங்கதேச மக்களுக்கு நிறைய கொடுமைகள் நடந்தன. இதனால, அந்தப் போருக்கு பாகிஸ்தான் மன்னிப்பு கேட்கணும்னு வங்கதேசம் நீண்ட நாளா கோரிக்கை வைச்சு வருது. இப்போ, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், இரண்டு நாள் பயணமா வங்கதேசம் வந்திருக்கார். இந்தப் பயணத்தின்போது, வங்கதேச வெளியுறவு ஆலோசகர் தவுஹித் ஹுசைன், 1971 போருக்கு மன்னிப்பு கேட்கணும்னு மறுபடியும் வலியுறுத்தியிருக்கார்.
இந்தப் பயணம் ரொம்ப முக்கியமானது. ஏன்னா, 2012-ல பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் வந்ததுக்கு அப்புறம், பாகிஸ்தான்ல இருந்து வங்கதேசத்துக்கு வர்ற முதல் உயர்மட்ட அதிகாரப்பூர்வ பயணம் இது. இதுக்கு முன்னாடி, வங்கதேசத்தின் பிரதமரா இருந்த ஷேக் ஹசீனா, இந்தியாவோடு நெருக்கமா இருந்ததால, பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே உறவு பெருசா வளரல.
ஆனா, கடந்த வருஷம் மாணவர் போராட்டத்தால ஷேக் ஹசீனா பதவியை இழந்து, இந்தியாவுல தஞ்சமடைஞ்சார். இப்போ, வங்கதேசத்துல இடைக்கால அரசு தலைமை ஆலோசகரா முகமது யூனுஸ் இருக்கார். இவரோட ஆட்சியில, இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளும், குறிப்பா சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களும் அதிகரிச்சிருக்கு. இந்தச் சூழல்ல, பாகிஸ்தான் இப்போ உறவை புதுப்பிக்க முயற்சி பண்ணுது.
இதையும் படிங்க: இந்தியாவுல அதுக்கெல்லான் சான்ஸே இல்லை!! வங்கதேசத்தின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதில்!!

இஷாக் தாரும் தவுஹித் ஹுசைனும் சந்திச்சு பேசினப்போ, பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டன. முதல்ல, 1971 போருக்கு மன்னிப்பு கேட்கணும்னு வங்கதேசம் தரப்பு வலியுறுத்தியிருக்கு. அப்புறம், அந்தக் காலத்துல இரு நாடுகளுக்கும் பொதுவா இருந்த சொத்துக்கள், வளங்கள் பங்கு வைக்கப்படாத பிரச்னைகளையும் எழுப்பியிருக்காங்க.
இதைத் தவிர, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை வளர்க்கணும்னு பேச்சு நடந்திருக்கு. இப்போ இருக்க வர்த்தகம் 100 கோடி ரூபாய்க்கு கீழே இருக்கு. இதை அதிகரிக்கவும், முதலீடுகளை விரிவாக்கவும் திட்டமிடுறாங்க. இந்த சந்திப்புல பல இருதரப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியிருக்கு.
வங்கதேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறவை முன்னோக்கி கொண்டு போக, இந்தப் பேச்சுவார்த்தை ஒரு முக்கியமான படியா பார்க்கப்படுது. ஆனா, 1971 போரோட வடு இன்னும் வங்கதேச மக்கள் மனசுல ஆழமா இருக்கு. அதனால, மன்னிப்பு கேட்கணும்னு வலியுறுத்துறது, உறவை மேம்படுத்தறதுக்கு முக்கியமான ஒரு விஷயமா இருக்கு. இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையே புது பாலம் அமைக்குமா, இல்லை பழைய காயங்களை மறுபடியும் கிளறுமானு பார்க்க வேண்டியிருக்கு.
இதையும் படிங்க: அரைக்கை சட்டை, லெக்கின்ஸ்-க்கு தடை!! தலிபான்களை பின்பற்றும் வங்கதேசம்.. பறிபோகும் ஆடை சுதந்திரம்!!