மேற்காசிய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்திய கண்ணிவெடி வைக்கும் சதி அம்பலமாகியுள்ளது. உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் இந்த முக்கிய கப்பல் பாதையை தடை செய்யும் முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது.
அமெரிக்க படை மத்திய தலைமையகம் (CENTCOM) வெளியிட்ட வீடியோவில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே கண்ணிவெடி வைக்க முயன்ற 16 ஈரான் படகுகளை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மார்ச் 10 அன்று நடந்த இந்த தாக்குதலில் பல ஈரான் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக CENTCOM உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் ஜலசந்தி வழியான எண்ணெய் போக்குவரத்து மேலும் பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.
போர் தொடங்கியதில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு, கச்சா எண்ணெய் விநியோகம் பெரிதும் தடைபட்டுள்ளது. இதனால் உலக அளவில் எண்ணெய் விலை $120-ஐ தாண்டியது. இந்தியாவில் கூட காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது. ஈரான் இத்தகைய கண்ணிவெடி முயற்சிகள் மூலம் உலக பொருளாதாரத்தை பாதிக்க முயல்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.
இதையும் படிங்க: 20 மடங்கு அதிக தாக்குதலை தொடுப்போம்!! இதுவரை பாக்காத பயங்கரம்!! ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் X-இல் வெளியிட்ட பதிவில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகள் வைத்திருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும்.
இல்லையெனில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படும். கண்ணிவெடி பதிக்கும் எந்த படகு அல்லது கப்பலையும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தும் அதே தொழில்நுட்பம் மற்றும் ஏவுகணைகளால் நிரந்தரமாக அழிப்போம்” என்று அவர் தெரிவித்தார். ஏற்கனவே 10 படகுகளை அழித்ததாகவும், மேலும் தொடரும் என்றும் டிரம்ப் கூறினார்.
இந்த சம்பவம் ஈரான்-அமெரிக்கா மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் பதிலடி கொடுக்கும் அச்சுறுத்தலை விடுத்துள்ள நிலையில், ஜலசந்தி பகுதியில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. உலக நாடுகள் எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோக பிரச்னைகளால் பெரும் அழுத்தத்தில் உள்ளன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் தேவைகளை கண்காணித்து வருகின்றன.
இதையும் படிங்க: ஹலோ புடின்!! இந்த போரை என்ன செய்ய?! ரஷ்ய அதிபரிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு!!