இந்தியாவில் அண்மையில் ஒரு வேடிக்கையான 'Gen-Z' ஆன்லைன் ட்ரெண்டாகத் தொடங்கி உலகளவில் வைரலான 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (KJK) போன்றே, தற்போது அண்டை நாடான பாகிஸ்தானிலும் 'கரப்பான் பூச்சி அவாமி கட்சி' மற்றும் 'கரப்பான் பூச்சி அவாமி லீக்' ஆகிய கற்பனையான நையாண்டிக் கட்சிகள் சோசியல் மீடியாக்களில் அசுர வேகத்தில் உதயமாகிப் புதிய புயலைக் கிளப்பியுள்ளன.
சமூக வலைத்தளங்களான எக்ஸ் (X), இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் பக்கங்களில் இளைய தலைமுறையினரால் இந்த வினோதமான அரசியல் நையாண்டித் ட்ரெண்ட் அசுர வேகத்தில் பரப்பப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நாட்டில் நிலவி வரும் வழக்கமான அரசியல் குழப்பங்கள், ராணுவக் கெடுபிடிகள் மற்றும் பொருளாதார மந்தநிலைகளைத் தங்களது பாணியில் நையாண்டி செய்வதற்காக அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் இந்த உத்தியைக் கையில் எடுத்துள்ளனர். 'கரப்பான் பூச்சி அவாமி கட்சி' (Cockroach Awami Party) மற்றும் 'கரப்பான் பூச்சி அவாமி லீக்' (Cockroach Awami League) என்ற பெயர்களில் அதிகாரப்பூர்வக் கணக்குகளைத் தொடங்கி, கரப்பான் பூச்சிகளின் படங்களை வைத்துத் தேர்தல் சின்னங்கள், போஸ்டர்கள் மற்றும் வேடிக்கையான தேர்தல் வாக்குறுதிகளை அக்குவேறு ஆணிவேறாகப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் நெட்டிசன்களின் இந்த புதிய ஆன்லைன் அட்டகாசத்தைக் கண்டு, இந்திய நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் அசுரக் கிண்டல்களை வாரி இறைத்து வருகின்றனர். இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அரசியல்வாதிகளை நையாண்டி செய்வதற்காக இளைஞர்களால் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janata Party) என்ற கற்பனையான கட்சி உருவாக்கப்பட்டு, அதன் கொடி, உறுப்பினர் சேர்க்கை அட்டைகள் இணையத்தில் செம்ம வைரலாகின. அதை அச்சு அசலாகப் பார்த்துப் பாகிஸ்தானியர்கள் தற்போது காப்பியடித்துள்ளதாக இந்திய நெட்டிசன்கள் 'மீம்ஸ்' (Memes) போட்டு அசிங்கப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 4 நாள் அரசுமுறை பயணம்! இந்தியா வந்திறங்கினார் சைப்ரஸ் அதிபர் நிகோஸ்!
"எல்லாவற்றிலும் இந்தியாவைப் பார்த்து காப்பியடிக்கும் பாகிஸ்தான், கடைசியில் கரப்பான் பூச்சி ஆன்லைன் ட்ரெண்டைக் கூடவா காப்பியடிப்பது?" என்று எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள் டாப் கியரில் கலாய்த்து தள்ளி வருகின்றனர். இரு நாட்டு எல்லைகளையும் தாண்டி, இணையத்தில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகும் இந்த 'கரப்பான் பூச்சி' ஃபீவர் தற்போதைய இளைய தலைமுறையினரின் டிஜிட்டல் கலாசாரத்திற்கு ஒரு வினோதமான சான்றாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!