தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 2026-ம் ஆண்டு நடக்கப் போற அதிபர் தேர்தல், இப்பவே பரபரப்பா இருக்கு. இந்தத் தேர்தலில் வலதுசாரி ஜனநாயக மைய கட்சியோட (Democratic Centre) முக்கிய உறுப்பினரும், அதிபர் வேட்பாளருமான மிகுய்ல் உரிபே துர்பே (Miguel Uribe Turbay) முக்கியமான பங்கு வகிச்சாரு. ஆனா, 39 வயசு மட்டுமே ஆன இவரோட அரசியல் பயணம், ஒரு கொடூரமான துப்பாக்கிச் சூட்டால் முடிச்சு வைக்கப்பட்டிருக்கு.
கடந்த ஜூன் 7-ம் தேதி, தலைநகர் போகோட்டாவோட போன்டிபான் மாவட்டத்துல உள்ள மொடேலியா பகுதியில் பிரசாரம் செஞ்சுட்டு இருந்தப்போ, அடையாளம் தெரியாத ஒருத்தர் அவரைப் பின்னாலிருந்து துப்பாக்கியால் சுட்டாரு. மிகுய்ல், முதுகுல பலமான காயங்களோட, மூணு தோட்டாக்கள், அதுல ரெண்டு தலையில பாய்ஞ்சதால, உயிருக்கு ஆபத்தான நிலையில் போகோட்டாவுல உள்ள சாண்டா ஃபே மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டாரு.
சாண்டா ஃபே மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை உள்பட பல சிகிச்சைகள் செய்யப்பட்டது. ஜூன் 16-ல் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, மறுபடியும் அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தது. இப்படி இரண்டு மாசமா உயிருக்குப் போராடி, கடைசியா ஆகஸ்ட் 11-ம் தேதி மூளையில் ஏற்பட்ட பெரிய ரத்தக்கசிவால் மிகுய்ல் உரிபே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: நாங்க என்ன எதிரியா? போலி பிம்பத்தை கட்டமைக்குறாங்க! ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்…
இந்தச் செய்தியை அவரோட மனைவி மரியா கிளாடியா தராஜோனா, எக்ஸ் தளத்தில் உருக்கமா பதிவு செஞ்சு உறுதிப்படுத்தியிருக்காங்க. மரியா கிளாடியா தராஜோனா, எக்ஸ் வலைதளத்தில், “நீங்க எப்போதும் என் வாழ்க்கையின் காதலாக இருப்பீங்க. எங்க குழந்தைகளை நான் பத்திரமா பார்த்துப்பேன்,”னு உருக்கமா பதிவு செய்து, இவரோட மரணத்தை உறுதிப்படுத்தி இருக்காங்க..

இந்தத் தாக்குதல் நடந்த உடனே, 15 வயசு பையனைக் கைது செஞ்சாங்க. இவர் ஒரு கூலிப்படையாளர்னு போலீஸ் சந்தேகிக்குது. இதுவரை ஆறு பேர் இந்த வழக்குல கைது செய்யப்பட்டிருக்காங்க, இதுல ஒரு முக்கியமான நபர் எல்டர் ஜோஸ் ஆர்ட்டேகா ஹெர்னாண்டஸ், இவர் இந்தத் தாக்குதலுக்கு மூளையா இருந்தவர்னு சொல்லப்படுது.
இவர் இன்டர்போல் பட்டியலில் இருக்குற குற்றவாளினு தகவல் இருக்கு. இந்தத் தாக்குதலுக்கு பின்னால், ஒரு காலத்தில் செயல்பட்டு பின்னர் கலைந்த FARC கிளர்ச்சிக் குழுவின் ஒரு பிரிவு இருக்கலாம்னு சந்தேகிக்கப்படுது. ஆனா, சரியான காரணம் இன்னும் தெளிவாகலை.
மிகுய்ல் உரிபே, கொலம்பிய அரசியலில் ஒரு முக்கியமான ஆளுமை. இவரோட தாத்தா ஜூலியோ சீசர் துர்பே அயாலா, 1978-82-ல் கொலம்பியாவோட 25-வது அதிபரா இருந்தவர். இவரோட அம்மா டயானா துர்பே, பத்திரிகையாளரா இருந்தவர், 1990-ல் மெடலின் கார்ட்டெல் கும்பலால கடத்தப்பட்டு, 1991-ல் தோல்வியடைஞ்ச மீட்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்.
2012-ல் போகோட்டா நகர சபை உறுப்பினரா தன்னோட அரசியல் வாழ்க்கையை ஆரம்பிச்ச மிகுய்ல், 2016-ல் நகர அரசாங்க செயலாளரா பணியாற்றினார். 2022-ல் ஜனநாயக மைய கட்சியோட செனட் தேர்தலில் “கொலம்பியா முதலில்”னு முழக்கமிட்டு, அதிக வாக்குகள் பெற்று செனட்டரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், இப்போதைய இடதுசாரி அதிபர் குஸ்டாவோ பெட்ரோவோட கடுமையான விமர்சகரா இருந்து, 2026 தேர்தலுக்காக பிரசாரம் செஞ்சாரு.
இவரோட மரணம், கொலம்பியாவில் 1980-90களில் நடந்த அரசியல் வன்முறைகளை மறுபடியும் நினைவுபடுத்தியிருக்கு. அந்தக் காலகட்டத்தில், பல அதிபர் வேட்பாளர்கள், பயங்கரவாதக் குழுக்களாலும், போதைப்பொருள் மாஃபியாக்களாலும் கொல்லப்பட்டாங்க. இந்தத் தாக்குதலை, கொலம்பிய அதிபர் பெட்ரோ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, சிலி அதிபர் கேப்ரியல் போரிக் உள்ளிட்ட பலரும் கண்டிச்சிருக்காங்க. “இது ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல்”னு ரூபியோ குறிப்பிட்டிருக்கார்.
இந்தச் சம்பவம், கொலம்பியாவோட அரசியல் களத்துல பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரிச்சிருக்கு. 2026 தேர்தல் நெருங்குற நிலையில், இந்தப் படுகொலை, நாட்டோட ஜனநாயக செயல்பாட்டுக்கு பெரிய சவாலா இருக்குது.!
இதையும் படிங்க: வரம்புக்கு மீறி வம்பிழுக்கும் பாக்., துயரத்திற்கு உள்ளாகும் இந்திய தூதரக அதிகாரிகள்..