வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

இதுதான் ஃபர்ஸ்ட் டைம்..!! ஏன் திமுகவுடன் கூட்டணி? பிரேமலதா பரபரப்பு பிரஸ்மீட்..!!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

திமுக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்தார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, எல். கே.சுதீஷ் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பின்போது போது உடன் இருந்தனர். இதனை அடுத்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் திமுகவுடன் கூட்டணி அமைத்து விட்டதாக பிரேமலதா அறிவித்தார்.

முதன்முறையாக திமுகவுடன் கூட்டணியை இறுதி செய்துள்ள நிலையில் தனது மகிழ்ச்சி அளிப்பதாக பிரேமலதா கூறியுள்ளார். திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெறும் என்றும் கூறினார். மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: முதன்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக..!! முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு..!!

2016 இல் இந்த கூட்டணி அமைந்திருக்க வேண்டும் என்றும் கலைஞர் கருணாநிதி இறந்த போது படம் நழுவி பாலில் விழுந்ததாக கூறியிருந்தார் என கூறினார். இந்த நிலையில், பத்தாண்டுகள் கழித்து கூட்டணி அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார். தொகுதி பங்கீடு, எந்தெந்த தொகுதிகளைப் போட்டி, வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பாக குழு அமைத்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார். தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: திமுக கூட்டணிக்கு ஓ.கே. சொன்ன பிரேமலதா?… உதாசீனப்படுத்திய எடப்பாடி வேண்டாம்…மொத்தமாக மாறிய களம்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी