வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

#BREAKING தொடரும் கனமழை; தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை… எங்கெல்லாம் கல்லூரிகளுக்கு லீவு?

தொடர்மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புதன்கிழமையன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து அதே பகுதியில் நிலவி வருவதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை எதிரொலி… கண்காணிப்பை பலப்படுத்திய அரசு..! மிஸ் ஆகவே கூடாது…!

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் நேற்று பிற்பகலில் தொடங்கிய கனமழை இரவிலும் நீடித்ததது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் இரு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து நேற்றே  அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

அதே போல் தூத்துக்குடிக்கும் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று ஒரு நாள், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நேற்று இரவு முதலே மழை தொடர்ந்து வருவதால் புதுக்கோட்டை, திருச்சி, மயிலாடுதுறை, விருதுநகர், தஞ்சாவூர், சிவகங்கை, கரூர், நாகை, அரியலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சுழற்றி அடிக்க போகுது… வங்கக்கடலில் காற்றழுத்த பகுதி… இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी