சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, திருவள்ளூர், ஆரணி, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக மக்களிடம் ஆசை வார்த்தைக் கூறி பண மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில், தமிழ்நாடு காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருந்தனர்.
ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், அவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக, ஆர்.கே.சுரேஷுக்கு சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அதனை எதிர்த்த ஆர்.கே.சுரேஷ், நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்புடைய இடங்கள் அனைத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் 15 இடங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறது. 2
இதையும் படிங்க: சென்னையில் காலையிலேயே அதிரடி ... 10க்கும் மேற்பட்ட இடங்களை சுத்துப்போட்ட அமலாக்கத்துறை ...!
438 கோடி ரூபாய் அளவிலான ஆருத்ரா கோல்டு மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி வரும் நிலையில் மோசடி செய்யப்பட்ட பணத்தை வைத்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொள்கையா? கிலோ என்ன..? இவங்க எல்லாம் நம்மள பத்தி பேசுறாங்க… விஜய் பதிலடி..!