தமிழ்நாடு முழுவதும் ஜூலை ஏழாம் தேதி முதல் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார். இந்த சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்கியது.
ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டது. தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் மக்களிடையே திமுக அரசு பற்றியும், அதிமுகவின் சாதனைகள் தொடர்பாகவும் விவரித்து வருகிறார். இந்த நிலையில், மயிலாடுதுறையில் விவசாயம், வணிகம், தொழிலாளர்கள் உள்ளிட்ட 17 சங்கத்தினருடன் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடினார். அப்போது, விவசாயிகளின் நலனுக்காக அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை கொண்டு வந்ததாக பெருமிதம் தெரிவித்தார். இயற்கை சீற்றம் உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்படும்போது உடனுக்குடன் நிவாரணம் கொடுத்தது அதிமுக தான் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விமர்சனங்கள தட்டி விடுங்க... நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய அறிவுரை..!
24 மணி நேரமும் மின் மோட்டார் இயக்க கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்ததாகவும், விவசாயிகள் துன்பப்பட கூடாது என்ற அடிப்படையில், தான் முதலமைச்சராக இருந்தபோது, ஒரு பக்கம் வறட்சி மறுபக்கம் ஆட்சியை காப்பாற்றுவது இருக்கும்போது மக்களுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்ததாகவும் கூறினார். 2048 கோடி வறட்சி நிவாரணம் கொடுத்ததாக கூறினார். விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக நிவாரணம் பெற்று கொடுத்தது அதிமுக தான் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரத்தின கம்பளம்! ரத்தக்கம்பளம்! மாறி மாறி தாக்கிக் கொள்ளும் திராவிட கட்சிகள்..!