வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

செம்ம ட்விஸ்ட்..! விஜயுடன் செங்கோட்டையன்… EPS- ன் SUDDEN ரியாக்ஷன்..!

தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் பங்கேற்காமல் இருந்தது அதேபோல் எடப்பாடி பழனிசாமி என் பெயரை கூட சொல்லாமல் இருந்ததும் அதிமுகவினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் தேச பொருளாக மாறிய நிலையில், சட்டசபையிலும் இருவருக்கும் இடையே சமூக நிலை ஏற்படவில்லை. செங்கோட்டையன் ஏன் பேசவில்லை என்பதை அவரிடமே கேளுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தது இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவு வருவதை உறுதி செய்வதாகவே தெரிந்தது.

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தார். தலைமைக்கு அவர் கெடு விதித்த நிலையில் அவரது கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இதற்கிடையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் மரியாதை செலுத்துவதற்காக ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் சென்ற நிலையில், சசிகலாவையும் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினார். 

இதையும் படிங்க: அண்ணன் செங்கோட்டையன்… அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்…!

ஆனால் தொடர்ந்து அதிமுகவை ஒருங்கிணைப்பு முயற்சி தொடரும் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். நேற்று தனது எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்த நிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் அதிமுகவில் இல்லை என்பதால் அது குறித்து பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். நன்றி வணக்கம் எனக் கூறி அங்கிருந்து நழுவி சென்றார். 

இதையும் படிங்க: #BREAKING: செங்கோட்டையனுக்கு ‘தலைமை’ பொறுப்பு… தவெகவில் கால் வைத்ததுமே 2 அதிமுக்கிய பதவிகளை அள்ளிக்கொடுத்த விஜய்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी