மதுரையில் இருந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் இன்றைக்கு ஸ்டாலின் ஆட்சி மீது மிகப்பெரிய வெறுப்பு ஏற்பட்டுள்ளது, மக்கள் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என ஊடகத்தில் பல்வேறு விவாதங்கள் வருகிறது. இன்றைக்கு திமுகவை வீழ்த்த பிறந்த மாவீரன் அதிமுக தான். இந்த அதிமுகவை புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் ராணுவ கட்டுப்பாடுடன் உருவாக்கி உள்ளார்கள். இன்றைக்கு சுயநலம் மிக்க, குடும்பவாரிசு கொண்ட திமுக ஆட்சியை வீழ்த்த அதிமுக தயாராகிவிட்டது.
இன்றைக்கு பல்வேறு விவாதங்கள் வெளியே வருகிறது, குறிப்பாக திமுக மீது வெறுப்பு உள்ளது என்று செய்திகள் வருகிறது குறிப்பாக ஸ்டாலின் வேண்டாம் என்று சொல்லும் நிலை உள்ளது. இதனால் அடுத்து யாரை தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்று அரசியல் அறிஞர்கள் விவாதித்து கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் அறிஞர்களை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் கடந்த நான்கரை ஆண்டு காலம் எடப்பாடியார் சிறப்பான ஆட்சியை செய்தார். நீர் மேலாண்மையில் புரட்சி, கல்வியில் புரட்சி, சட்ட ஒழுங்கு பாதுகாப்பதில் புரட்சி, தொழில் வளர்ச்சியில் புரட்சி என சாமானியராக இருந்து சரித்திரம் படைத்த எடப்பாடியாரின் வரலாற்று பக்கங்களை மறைத்து முன்னெடுப்பது என்பது உங்களுக்கு நீங்கள் சாயம் பூசுவது போல் நிலையில் உள்ளது.
இதையும் படிங்க: ரோபோ சங்கர் எப்படி வளர்ந்தாரு தெரியுமா? இபிஎஸ் உருக்கம்
அதிமுகவின் ஆட்சியை மீண்டும் மலரச் செய்யும் எடப்பாடியார் நிச்சயம் தேசியக்கொடியை ஏற்றுவார்.மக்கள் இந்த தீர்ப்பை வழங்க தயாராகி விட்டார்கள் இன்றைக்கு மக்கள் தெளிந்த நீரோடையாக இந்த முடிவை எடுத்து விட்டார்கள் .அரசியலில் அறிஞர்கள் நீங்கள் புலம்ப வேண்டாம், பிறரை குழப்ப வேண்டாம் மக்கள் தெளிவாக உள்ளார்கள்.
இன்றைக்கு 8 கோடி மக்களின் பிரதிபலிப்பாக எடப்பாடியார் உள்ளார். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விட்டது போல இன்றைக்கு சிலர் தங்கள் கண்ணை மூடிக்கொண்டு விமர்சனம் செய்து வருகிறார்கள். எடப்பாடியார் மீது நீங்கள் வாழ்த்து பாடுபட்டாலும் பரவாயில்லை. அவரின் எண்ணத்தை நீங்கள் ஒருபோதும் சிதைக்க முடியாது
எடப்பாடியார் மீது எத்தனை அம்புகள், வேல்கள் பாய்ந்தாலும் அதை தகர்த்தெறிந்து, மக்கள் சேவை ஆற்றி வருகிறார். 2026 இல் எடப்பாடியார் தான் முதலமைச்சர். இல்லம் தோறும் எடப்பாடியார் என்று முழக்கமிட்டு துண்டு பிரசுரம் வழங்கி வீடு ,வீடாக சென்று திண்ணை பிரச்சாரத்தின் மூலம் அதிமுக பேரவை தொண்டர்கள் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சொந்த மாவட்டத்திலேயே இப்படியா? - “சாலையில் வீசிச்சென்ற அதிமுக தொண்டர்கள்” - காலையிலேயே இபிஎஸ் காதுகளை எட்டிய ஷாக்கிங் நியூஸ்...!