தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அந்த வாழ்த்து செய்தியில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது எனக்கூறியிருந்தார். பாகிஸ்தான் பிரதமரின் இந்த தீபாவளி வாழ்த்திற்கு இந்திய மக்கள் பலரும் சோசியல் மீடியாக்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், திங்கள்கிழமை தனது இதயப்பூர்வமான தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். அந்த வாழ்த்து செய்தியில்,மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது எனக்கூறினார். ஆனால் பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் இதேவேளையில் உலக நாடுகள் முன்பு நல்லவர் போல் ஷெஹ்பாஸ் ஷெரீப் வாழ்த்து கூறியிருப்பது இந்திய மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஷெபாஸ் ஷெரீப் தனது வாழ்த்துச் செய்தியில், தீபாவளியின் தீபங்கள் வீடுகளையும் இதயங்களையும் ஒளிரச் செய்யும் அதே வேளையில், இந்த பண்டிகை இருளை அகற்றி, நல்லிணக்கத்தை மேம்படுத்தி, அமைதி, இரக்கம் மற்றும் பொதுவான செழிப்பை நோக்கி நம்மை வழிநடத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த பண்டிகை இருளின் மீது ஒளியின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையின் வெற்றியையும், விரக்தியின் மீது நம்பிக்கையின் வெற்றியையும் குறிக்கிறது என்று கூறினார். சகிப்பின்மை மற்றும் சமத்துவமின்மை போன்ற சமூக சவால்களை சமாளிக்க இந்த உணர்வு நம் அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும் என்று ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில், அனைத்து மதங்கள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த மக்களும் அமைதியாக வாழவும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோருக்கு குட்நியூஸ் - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு...!
பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரியும் இந்து மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தீபாவளியை ஒளி, நம்பிக்கை மற்றும் புதுப்பித்தலின் பண்டிகை என வர்ணித்த அவர், தீபாவளியின் ஒளி எப்போதும் இருளை வெல்லும் என்றும் கூறினார். வெறுப்பு மற்றும் பிரிவினையை விட உண்மை, அமைதி மற்றும் அன்பு மேலோங்க வேண்டும் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது என்று பிலாவல் பூட்டோ குறிப்பிட்டிருந்தார்.
பாகிஸ்தான் சமூகத்தில் இந்துக்கள் மிகப்பெரிய சிறுபான்மையினர் என்பதால், அந்நாட்டுத் தலைவர்களின் தீபாவளி வாழ்த்துக்கள் சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ளன. இருப்பினும், பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், கோயில்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன. இந்தியா உட்பட பல நாடுகள் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை சர்வதேச அரங்கில் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றன. இந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமரின் தீபாவளி வாழ்த்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. நெட்டிசன்கள் அவரை சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING பகீர் அலர்ட்... வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கப்போகுது...!