பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 இடங்களில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் குழுக்களை “ஆப்ரேஷன் சிந்தூர்” மூலம் இந்திய ராணுவம் அழித்தது, இதில் தீவிரவாதிகள் பதுங்கிய இடங்களை எவ்வாறு ராணுவம் கண்டறிந்தது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் அமைப்பான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகியோரின் முகாம்கள், உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன.
இதையும் படிங்க: 2 நாட்களாக உளவு.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தாக்குதல்.. தீவிரவாதிகளின் திட்டம் அம்பலம்..!
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க கடந்த 10 நாட்களாக ராஜாங்கரீதியான நடவடிக்கைகளை எடுத்துவந்தது. தூதரகங்களை மூடுதல், பாகிஸ்தான் மக்களுக்கு விசாக்களை ரத்து செய்து அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புதல், சரக்கு, விமானம், கப்பல் போக்குவரத்தை ரத்து செய்தல், வான்வெளியை மூடுதல், நதிநீரை நிறுத்துதல், சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது என பாகிஸ்தானுக்கு பல வகையிலும் இந்தியா நெருக்கடியளித்தது.

அதேசமயம், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில்இருக்கும் தீவிரவாதிகள் வசிப்பிடம், பயிற்சிக்கூடம், கட்டமைப்பு வசதிகளையும் நோட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் இறங்கியது. இதற்காக முப்படைகளுக்கும் முழுமயைாக சுதந்திரம் வழங்கி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதியளித்தது.
கடந்த இரு நாட்களாக விமானப்படைத் தளபதி, கப்பற்படைத் தளபதி, ராணுவத் தளபதி ஆகியோர் தனித்தனியை பிரதமர் மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் இன்று நாடுமுழுவதும் பாதுகாப்பு ஒத்திகையை செய்யவும் மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு யாரும் எதிர்பாரா நிலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள், வசிப்பிடங்கள், கட்டமைப்பு வசதிகள் இருக்கும் இடங்களை தாக்கி அழித்தது.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் பயிற்சிக்கூடம், ஆட்சேர்ப்பு மையம் பாகிஸ்தானில் பகவால்பூரில் செயல்பட்டு வந்தது. அதேபோல லாகூரில் முரிட்கே பகுதியில் தீவிரவாதி ஹபிஸ் சயத் தொடங்கிய லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைமையிடமும், இதன் தாய் அமைப்பான ஜமாத் உல் தவா அமைப்பு அலுவலகமும் செயல்பட்டு வந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபர்பாத் பகுதியில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த தீவிரவாத அமைப்புகளை இந்த ராணுவம் குறிவைத்து அழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் குறைந்தபட்சம் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வந்துள்ளன.

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு (என்டிஆர்ஓ) அமைப்பு மூலம் பாகிஸ்தானிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் தீவிரவாதிகள் நடமாட்டம், புகலிடம், பயிற்சிக்கூடம் ஆகியவை கண்காணிக்கப்பட்டு அவை உளவுத்துறை மூலம் அந்த இடங்கள் உறுதி செய்யப்பட்டன. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்திய அரசால் தேசிய தொழில்நுட்ப புலனாய்வு அமைப்பு 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பிரதமர் அலுவலகத்துக்கு கீழும் செயல்படும். இதன் முக்கியப் பணி என்பது, இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்கூட்டிய தகவல்களை வழங்கி உஷார்படுத்துவதாகும்.

குறிப்பாக தீவிரவாதம், சைபர் அச்சுறுத்தல், எல்லை தாண்டிய தீவிரவாதத்தை கண்காணிப்பதாகும். தீவிரவாதிகளை தேடுதல், கண்காணித்தல் பின்தொடர்தலில் என்டிஆர்ஓ முக்கியப் பங்காற்றியுள்ளது. தீவிரவாதிகளை கண்காணிப்பதில் முக்கியப் பங்காற்றும் என்டிஆர்ஓ, ஆர்ட் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுகிறது. இந்தியாவின் கண்கள், காதுகள் என்று என்டிஆர்ஓ அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'துப்பாக்கியுடன் மிரட்டிய 15 வயது சிறுவர்கள்'.. உயிர் பிழைத்தவர் கண்ணீர் பேட்டி..!