பிரிட்டனின் கடற்படை மற்றும் விமானப் படையை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்தது ஈரான் அரசு!
பிரிட்டனின் கடற்படை மற்றும் விமானப்படையைப் பயங்கரவாத அமைப்புகளாகவும், MI6 உளவு அமைப்பைப் பகைமைக் குழுவாகவும் ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரிட்டன் நாட்டின் அரச கடற்படை (Royal Navy) மற்றும் அரச விமானப்படையை (Royal Air Force) அதிகாரப்பூர்வமாகப் பயங்கரவாத அமைப்புகளாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. மேலும், பிரிட்டனின் புகழ்பெற்ற வெளிநாட்டு உளவு அமைப்பான 'எம்ஐ6' (MI6) நிறுவனத்தைப் 'பகைமைக் குழு' (Hostile Group) எனப் பட்டியலிட்டு ஈரான் வெளியுறவு அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான ராஜீய உறவு வரலாறு காணாத விரிசலைச் சந்தித்துள்ளது. முன்னதாக, கடந்த ஜூலை மாதத்தில் ஈரானின் சக்திவாய்ந்த ராணுவப் பிரிவான இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையை (IRGC) பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அரசு அறிவித்திருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பழிவாங்கும் நடவடிக்கையாக ஈரான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
-rwlzf.webp)
இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், சர்வதேச சட்ட நெறிமுறைகள் மற்றும் சமநிலைப் பதிலடி நடவடிக்கைகளின் அடிப்படையில் பிரிட்டனின் கடற்படை மற்றும் விமானப்படை பயங்கரவாத இயக்கங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் அந்நாட்டின் உளவுப்பிரிவான எம்ஐ6 அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான பகைமை அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசின் இத்தகைய விரோதப் போக்கினால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் லண்டன் நிர்வாகமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.9,500 கோடி தர்றோம்! தாக்குதலை நிறுத்துங்க! ஈரான் மத்தியஸ்தத்தில் சவுதி-ஹவுதி ஒப்பந்தம்?
இங்கிலாந்து நாட்டின் முக்கிய ராணுவக் கட்டமைப்புகளையே பயங்கரவாத அமைப்புகளாக ஈரான் பகிரங்கமாகப் பிரகடனம் செய்திருப்பது சர்வதேச விவகாரங்களில் பெரும் அதிர்வலைகளையும் ராஜீய ரீதியிலான சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்த வார இறுதியிலேயே தாக்குதல் நடக்கலாம்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! அமெரிக்க தூதர் அதிரடி தகவல்!












