உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால் டிரம்பால் அதனை சாத்தியமாக்க முடியவில்லை. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் நடவடிக்கைகளில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இரண்டு மிகப்பெரிய கச்சா எண்ணை நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை டிரம்ப் விதித்துள்ளார். இதனால் நம் நாட்டுக்கும் பிரச்சனைகள் வரலாம் என்பதால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது பற்றி அரசு மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கி உச்சத்தை தொட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போரை தொடங்கியது. இந்த போர் நான்காவது ஆண்டை நெருங்கி வருகிறது. போர் இன்னுமும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்யா-உக்ரைன் மாறி மாறி தாக்கிக் கொள்கிறார்கள். இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமீர் புத்தின் ஆகியோருடன் தனித்தனியாக பேச்சு வார்த்தைகளை நடத்தினார். இருப்பினும் போர் நிறுத்தம் இன்னும் சாத்தியமாகவில்லை. போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா உடன்படவில்லை. இதனால் ரஷ்யாவை முடக்கும் வகையில் டிரம்ப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார் டிரம்ப். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்குவதால் நம் நாட்டுக்கு 25% வரியை விதித்தார். அதேபோல் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவையும் குறிவைத்து வரி போட தயாராகி வருகிறார். இருப்பினும் நம் நாடும் சீனாவும் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கி பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. இதன் அடுத்த கட்டமாகத்தான் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லூக்ஆயில் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீது டொனால்ட் ட்ரம்ப் பொருளாதார தடைகளை விதித்துள்ளார். இது பற்றி ட்ரம்ப் என்ன சொல்லியிருக்கிறார் என்றால் , “இது மிகப்பெரிய தடைகள். ரஷ்யாவின் இரு பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு எதிராக தடையை நாங்கள் விதித்துள்ளோம். அதே நேரம் இந்த தடைகளை நீண்ட காலம் அம்பலப்படுத்தும் சூழல் ஏற்படாது என நம்புகிறோம். போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். போரை முடிவுக்கு கொண்டுவர இதுவே சரியான நேரம் என நினைக்கிறேன்” என கூறியிருக்கிறார் ட்ரம்ப்.
இதையும் படிங்க: ரஷ்யாவை சம்மதிக்க இதுதான் ஒரே வழி..!! எண்ணெய் நிறுவனங்களுக்கு தடை விதித்து டிரம்ப் அதிரடி..!!
மேலும் போர் நிறுத்தம் தொடர்பாக ஹங்கேரியில் விரைவில் டிரம்ப்- புத்தின் இருவரும் சந்திக்க இருந்த நிலையில், அந்த சந்திப்பும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது ரஷ்யா கச்சா எண்ணெய் விற்பனை மூலமாகத்தான் பணம் சம்பாதித்து போரை முன்னெடுப்பதாக டிரம்ப் நினைக்கிறார். இதனால் ரோஸ்நெப் மற்றும் அல்லூக் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கும் டிரம்ப் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரிகளையும் போட்டிருக்கிறார். இந்த நிலையில் தான் அடுத்த கட்டமாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணை வாங்கும் நிறுவனங்களை டிரம்ப் குறி வைக்கலாம் என கூறப்படுகிறது.
நம் நாட்டை எடுத்துக்கொண்டால் மத்திய அரசு மற்றும் முகேஷ் அம்பானியின் தனியார் நிறுவனமானரிலயன்ஸ் சார்பில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் அதிகமாக வாங்கப்படுகிறது. இதனால்ரிலயன்ஸ் மற்றும் மத்திய அரசு சார்பில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைக்கவோ அல்லது நிறுத்தவோ செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் எண்ணை நிறுவனங்களை குறிவைத்து பொருளாதார தடைகளை விதிக்கின்றன. ரஷ்யாவிடமிருந்து கச்சாய் எண்ணெயை அதிகம் வாங்கும் இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான ரிலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட் இனி அதனை கனிசமான அளவுக்கு குறைக்க அல்லது முற்றிலமாக நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேபோல் மேற்கத்திய நாடுகளின் புதிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காக அரசு பெட்ரோலிய நிறுவனங்களும் தங்களின் கொள்முதல் திட்டங்களை மறுபரிசீலனை செய்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணை வாங்குவதை நிறுத்த போவதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு சார்பில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக ட்ரம்ப் கூறிய கருத்தையும் மத்திய அரசு மறுத்துதான் வருகிறது. இருப்பினும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ரஷ்யா மீதான அதிகரிக்கும் அந்த பொருளாதார தடைகளால் இந்தியா சிக்கலில் சிக்கி கொண்டிருக்கிறது.
நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் ரஷ்யா 38%த்தை பூர்த்தி செய்கிறது. இப்படியான சூழலில் அந்த நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்படுகிறது என்றால் அல்லது குறைக்கப்படுகிறத, என்றால் கண்டிப்பாக நம் நாட்டில் அது சிக்கலை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை உருவாக்கி பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு அது வழிவகுத்துவிடும். அதுமட்டுமின்றி ரஷ்யாவுக்கு மாற்றாக மாற்றும் மார்க்கெட்டை நாம் தேட வேண்டி இருக்கும். இதனால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென சர்வதேச அளவில் உயரும். இதுவும் பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமாகும். இதனால் தற்போது டிரம்பின் நடவடிக்கை கச்சா எண்ணெய் விஷயத்தில் மொத்த நாடுகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளதாகவே நிபுணர்கள் சொல்கிறார்கள். ஏனென்றால் டிரம்ப் தற்போது ரஷ்யாவின் பெரிய இரண்டு கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது விதித்த பொருளாதார தடையால் 3% வரை கச்சா எண்ணெய் விலைகள் உயர தொடங்கி உள்ளன. இந்தியாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்போது அதன் விலை இன்னும் உச்சத்தை தொடும் என கூறுகிறார்கள் நிபுணர்கள்.
இதையும் படிங்க: ரஷ்யாகிட்ட இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது..!! மறுபடியும் மறுபடியும் அடித்து சொல்லும் டிரம்ப்..!!