தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை.
இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஏராளமானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

கரூர் சம்பவம் எதேர்ச்சையாக நடைபெறவில்லை என்றும் அரசியல் கட்சியினரின் தலையிட இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கரூர் சம்பவத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விஜய் பிரச்சாரத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: இதவிடவா பெரிய அசம்பாவிதம் நடக்கப் போகுது? விஜய் கரூர் செல்லாதது குறித்து கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்...!
இதற்கிடையில் கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு அவ்வப்போது விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய வீடியோ ஒன்று வெளியானது. விஜய் பேசிக் கொண்டிருந்த போதே கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே, தொங்கியபடி பலரை தொண்டர் ஒருவர் காப்பாற்றுவது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: கரூர் சம்பவம் எதிரொலி! விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு... தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!