மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பாலு கூறியதாவது, பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பணிகள் வாக்குச்சாவடி வாரியாக கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. வருகின்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறுகிற கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும். அதற்கான வியூகங்களை வகுத்து கூட்டணியை உருவாக்குவதற்கான திட்டங்களை எங்களது கட்சியின் தலைவர் அன்புமணி வருகிறார். தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் கட்சி முழுமையாக எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது.
தேர்தல் ஆணையம் கட்சி நிர்வாகிகள் நீதிமன்ற தீர்ப்பு ஆகியவை அன்புமணி கட்டுப்பாட்டில் வந்ததன் காரணமாக அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர் தரப்பினர் நாள்தோறும் எங்கள் மீது பல்வேறு வதந்திகளையும், விமர்சனங்களையும் வைத்து வருகிறார்கள்.
எங்களது நோக்கம் தமிழகத்தில் மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்துவதுதான் அதற்கான பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். எங்களது ஒரே இலக்கு திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் திமுக மீது வெறுப்பில் உள்ளனர். சமூக நீதி அரசு திராவிட மாடல அரசு என சொல்லிக் கொள்ளும் திமுக அரசு சமூக நீதிக்காக இதுவரை துரும்பை கூட தூக்கிப் போடவில்லை என்கிற கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி வருகின்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார்.
இதையும் படிங்க: கட்சியில் இல்லாத அன்புமணி எப்படி என்னை நீக்க முடியும்? பாமக என்றாலே ராமதாஸ் தான்… G.K. மணி திட்டவட்டம்…!
திராவிட கட்சிகள் பொதுவாக சமூக நீதியில் அக்கறை கொண்டதாக சொல்வார்கள் பெரியார் இயல்பாக ஒரு வார்த்தை சொல்வார் தலையை எண்ணு இட ஒதுக்கீடு வழங்கு என கூறுவார். விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றால் அதற்கான அடிப்படை தரவுகளுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதற்காக பாட்டாளி மக்கள் கட்சி 40 ஆண்டுகளாக போராடி வருகிறது. நீதிமன்றம் கருத்தரங்கம் போராட்டம் என பல்வேறு தளங்களில் இதற்காக நாங்கள் போராடியுள்ளோம். இப்பொழுதும் கூட அதற்கான வாய்ப்பு அமைந்த போதும் திராவிட முன்னேற்றக் கழகம் அதனை செய்ய தவறிவிட்டது.
பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் பாட்னா நீதிமன்றம் ஒரு மாநிலத்திற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முழு அதிகாரம் உண்டு என தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்பொழுது கூட கர்நாடகா, தெலுங்கானாவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டடுள்ளது.
ஆனால் சமூக நீதியின் பிறப்பிடம் பெரியார் மண் என சொல்லுகின்ற தமிழக அரசு இன்று இதனை செய்ய தவறி உள்ளது. இதைத்தான் நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம் நீண்ட காலமாக பாட்டாளி மக்கள் கட்சி இதற்காக குரல் கொடுத்து வரும் இந்த வேளையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி நாங்கள் செய்த போராட்டத்திற்கு திமுகவை தவிர அதிமுக நாம் தமிழர் கட்சி உள்ளிட்டு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். சீமான் அவர்களும் புதிதாக கட்சி துவங்கியுள்ள விஜய் அவர்களும் இதனை அழுத்தம் திருத்தமாக சொல்லி வருகிறார்கள் அந்த வகையில் ஒத்த கருத்துடைய நாங்கள் சந்தித்து பேசி இருக்கிறோம்.
2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து கட்சியின் பொதுக்குழு முடிவெடுக்கும் எங்கள் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் முடிவெடுப்பார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது அவர்கள் தேர்தல் ஆணையம் கொடுத்த அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தான் வழக்கு தொடுத்துள்ளார்கள். அந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மறுத்து, நீங்கள் உங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டுமானால் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுங்கள் என உத்தரவிட்டுள்ளது.
இன்றைய நிலையில் 2026 ஆகஸ்ட் மாதம் வரை கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் என்றுதான் அங்கீகாரம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது அது இன்றும் நடைமுறையில் உள்ளது. சிவில் நீதிமன்றத்தை நாடுங்கள் என நீதிமன்றம் கூறியதை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர். எங்களுக்கு மாம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது, தேர்தல் அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஓர் அபத்தமான இரண்டு விதமான அறிவிப்பினை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள் அதாவது 2026 தேர்தலுக்கான கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக்கு இதுவரை அவர்களை யாரும் அழைக்கவில்லை அவர்களை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை என்ற காரணத்திற்காக ஒரு லீகல் நோட்டீஸ் ஒன்று கொடுத்து எங்களுடன் யாரும் எந்தவித கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தக் கூடாது என்று ஒரு சிறுபிள்ளைத்தனமான அறிக்கையை கொடுத்துள்ளார்கள். அதனை நீதிமன்ற அவமதிப்பு என்கிறார்கள் இறுதி நோட்டீஸ் என்கிறார்கள். இறுதி எச்சரிக்கை என்கிறார்கள். இல்லையென்றால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறி இருக்கிறார்கள்.
எங்கள் மீது அவர்கள் எப்போது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை எதிர்பார்த்து காத்து உள்ளோம். இதுபோன்ற செய்திகளை பரப்பி குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டுள்ளார்கள். இன்னொரு நல்ல காரியம் பாட்டாளி மக்கள் கட்சியில் நேற்று நடந்துள்ளது கட்சியிலிருந்து விளக்கம் கேட்டு கொடுக்கப்பட்ட நோட்டீஸ் இருக்கு ஜி.கே. மணி அவர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை இதனால் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஜி.கே.மணி நேற்று நீக்கப்பட்டுள்ளார்.
ஒரு கட்சியிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டதற்காக தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி, பட்டாசு வெடித்து, இடுப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது பாட்டாளி மக்கள் கட்சியில் ஜி.கே .மணிக்குதான் நடைபெற்று உள்ளது. இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இதோடு எங்கள் கட்சியில் உள்ள எல்லா குழப்பங்களும் தீர்ந்துபோய்விட்டது. வரும் 29 ஆம் தேதி சேலத்தில் பொதுக்குழு நடத்த முயற்சி செய்து வருகிறார்.இது சட்டவிரோதமானது.அப்படி ஓர் பொதுக்குழுவை நடத்த அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.அந்த பொதுக்குழு தீர்மானங்கள் பாட்டாளி மக்கள் கட்சியை கட்டுப்டுத்தாது.
அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லுவார். எது வேண்டுமானாலும் செய்வார். அவருக்கு சொல்லிக் கொடுத்ததை அவர் செய்கிறார். அவருக்கு சொல்லிக் கொடுத்தது அறிவாலயம், அதனை ஜிகே மணி செய்து வருகிறார். இந்த பிரச்சனை வந்த போது ஆரம்பத்தில் சில குழப்பங்கள் கட்சியினரிடையே இருந்தது தற்போது அவை முழுமையாக நீங்கி விட்டது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ஐயா ராமதாஸ் அவர்கள் சிலரால் வழிநடத்தப்படுகிறார், சிலர் எழுதிக் கொடுப்பதை ஊடகங்கள் வாயிலாக பேசி வருகிறார் என்பதை அனைவரும் உணர்ந்து விட்டனர்.ஆகவே தற்போது கட்சியினர் இடையே இந்த குழப்பமும் இல்லை. கட்சி முழுமையாக அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் தான் உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியை வருங்காலத்தில் அன்புமணி ராமதாஸ் அவர்களால் தான் வழிநடத்த முடியும் எனவே எங்களிடம் எந்த குழப்பமும் இல்லை என்றார்.
கொடியை பயன்படுத்தக் கூடாது சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்கிற எந்த கட்டுப்பாடும் எங்களுக்கு கிடையாது. அது அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு உள்ள பொதுவான விதி அதைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளோம் எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதியும் கிடையாது. நாங்கள் இரு அணிகள் அல்ல ஒரே அணிதான். வரும் தேர்தலில் தமிழகத்தில் திமுக படுதோல்வி அடையும்,
கூட்டணி குறித்து எங்கள் தலைவர் அண்புணி ராமதாஸ் முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாமகவிலிருந்து G.K. மணி நீக்கம்... அவதூறு பரப்பியதாக அன்புமணி அதிரடி நடவடிக்கை...!