தென்கிழக்கு இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் கிட்டத்தட்ட வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிரமடைந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை வழியாக வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என கூறப்பட்டிருந்தாலும், அதற்கு பிறகு புயலாக வலுபெறுமா என்பதை தொடர்ந்து அதனுடைய நகர்வுகளை பொறுத்து கணிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட கடலோரங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 29ஆம் தேதி அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை என்பது விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றெழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடிய அதே நேரத்தில், ஏற்கனவே குறிப்பிட்டது போல் வட கடலோர மாவட்டங்களிலும், பாண்டிச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக 28ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கும் அதிக கனமாலைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை? - தலைமையாசிரியர்களுக்கு பறந்த உத்தரவு...!
நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்ற நிலையில், நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றிருக்கிறது. இது அடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்திற்கு இன்று கனமழை எச்சரிக்கையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை திருவாரூர், நாகைக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING வங்கக்கடலில் இன்று உருவாகிறது ‘சென்யார்’ புயல்.... எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்?