வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சேண்பாக்கம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இதனை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது முள்ளிப்பாளையம் பாறைமேடு வீராசாமி தெருவை சேர்ந்த பெண்கள் அமைச்சரை முற்றுகையிட்டு, தாங்கள் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி அவதிக்குள்ளாவதாகவும் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சரை முற்றுகையிட்டு முறையிட்டனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியதை எடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பொதுவாக தங்களது குறைகளை கூற வரும் தொண்டர்கள் அல்லது பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சில சமயங்களில் கோவமாக பேசி சிக்கிக் கொள்வார்கள். சமீப காலமாக அப்படி நிறைய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அதெல்லாம் அரசியல் சர்வீஸ் இல்லாத கட்சி... தவெகவை தவிடு பொடியாக்கிய துரைமுருகன்...!
அப்படியிருக்க, திமுக அமைச்சர் துரைமுருகன் சற்றும் தயங்காமல் நாளைக்கே மக்கள் சொன்ன பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவைத்துவிடுகிறேன். நானே நேரில் வந்து ஆய்வு செய்கிறேன் என சமாதானம் சொல்லிவிட்டு சென்றார்.
மேலும் இது குறித்து நாளை காலை 9 மணிக்கு அப்பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்... சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!