தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்ததில் இருந்து காவல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “எதிர்க்கட்சியாக இருந்தபோது, ‘Sorry சொன்னால் போதுமா?’ என்று என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரான பிறகு அதைக்கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்? என்று கேள்வி எழுப்பினார்.
Accountability, Apology இந்த வார்த்தைகள் முதலமைச்சருக்குப் பிடிக்காத பட்டியலில் இருக்கின்றனவா?” என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூட சொல்ல மனமில்லாத படுபாதக அரசுக்கு வன்மையான கண்டனம் தெரிவித்தார். தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, காவல் துறையின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஒன்றுக்கு மேற்பட்ட காவல் மரணங்கள் பதிவாகி வருவதாகக் கூறப்படுகிறது. சில சம்பவங்கள் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டாலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் செய்திகள் மக்களை உலுக்கி வருகின்றன. கொடைக்கானல், திருநெல்வேலி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இளைஞர்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் என பலரும் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்ட பிறகு உயிரிழந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையும் படிங்க: துணை வேந்தருக்கே பகிரங்க மிரட்டல்... விளைவு விபரீதமா இருக்கும் CM SIR..! அப்பாவு தாக்கு..!!
ஒரு சம்பவத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு வியாபாரி, சிறிய தகராறு காரணமாக காவல் நிலையத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அடுத்த நாள் காலை அவரது உடல் மருத்துவமனையில் இருந்தது. குடும்பத்தினர் கூறுகையில், “அவர் உடலில் தெரிந்த காயங்கள் காவல் துறையினரின் அடியால் ஏற்பட்டவை” என்று குற்றம் சாட்டினர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் “இயற்கையான மரணம்” என்று மட்டுமே கூறப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் போது, முதலமைச்சர் மௌனம் காக்கிறார் என ஸ்டாலின் சாடினார்.
இதையும் படிங்க: #BREAKING தமிழ்தாய் வாழ்த்துக்கு 3வது இடமா? - விடிந்ததுமே கொதித்தெழுந்த அன்புமணி...!