இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, முன்னாள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியும், தற்போதைய எம்.என்.ஏ. தாஹிர் இக்பால் நாடாளுமன்றத்தில் கதறி அழுதார். "கடவுளே, தயவுசெய்து இந்த நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்" என்று மன்றாடினார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்க இந்திய ஆயுதப் படைகள் தனது எல்லைக்குள் உள்ள பல பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியது. இதனை அடுத்து பாகிஸ்தான் செனட்டரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான தாஹிர் இக்பால் நாடாளுமன்றத்தில் பீதியில் கதறி அழுதார். இந்தியாவின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்துப் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார், "கடவுளே, தயவுசெய்து இந்த நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானைக் காப்பாற்றுங்கள் என்று உங்கள் அனைவரையும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்'' என இன்று நடைபெற்ற 16வது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்று பேசியபோது கண்ணீர்விட்டுக் கதறினார்.
இதையும் படிங்க: வான் பாதுகாப்பை முற்றாக அழித்த இந்தியா... பாக்., ராணுவத்துக்கு மரண அடி..! சீனாவுக்கும் பெரும் தோல்வி..!

அவரது பேச்சு பயங்கமாக வைரலாகி வருகிறது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள சிலர், ''பாகிஸ்தான் அனைத்து பயங்கரவாத உள்கட்டமைப்புகளையும் அகற்ற வேண்டும். பிராந்தியத்தை சீர்குலைக்க பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அமைதிக்காக உண்மையாக ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால், சர்வதேச சமூகம் அதன் அணுசக்தி சொத்துக்களைப் பாதுகாக்க தலையிட வேண்டும். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அண்டை நாடான பாகிஸ்தானாக, இந்த ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளில் விழும் அபாயம் குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்.
I'm begging you all, save Pakistan from India — Pakistani MP
What a satisfying video!🤩💀 pic.twitter.com/jOIGCjVIK2
— Frontalforce 🇮🇳 (@FrontalForce) May 8, 2025
''நீங்க ஆரம்பிச்சுட்டீங்க, நாங்க ஒண்ணும் பண்ணல. முதலில் நீங்க 1947ல வந்தப்போ, இப்போ வரைக்கும் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைப் பரப்புறீங்க. உங்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நம்ம அப்பாவி மக்களைக் கொல்றாங்க, அப்பாவி மக்களைத் தாக்குறாங்க. இப்போ நீங்க நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு நாங்க உங்களைத் தண்டிப்போம்.போதும் போதும்'' என தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் அடிக்கு பிறகு உள்ளூரில் ரத்தவேட்டை... பாக்., ராணுவத்தை கருவறுத்த பலூச் படை..!