இந்திய பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் பரபரப்பை கிளப்பியிருக்கு. இந்த விவாதம், கடந்த ஏப்ரல் 22, 2025-ல் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மே 7-ல் நடத்திய ஆபரேஷன் சிந்தூரை மையப்படுத்தியது. இந்த ஆபரேஷன்ல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.
இதை இந்திய அரசு பயங்கரவாதத்துக்கு எதிரான பெரிய வெற்றியா பார்க்குது. ஆனா, எதிர்க்கட்சிகள் இதைப் பற்றி நிறைய கேள்விகளை எழுப்பி, விவாதிக்க வேண்டும்-னு கோரிக்கை வச்சு, கடந்த ஒரு வாரமா பாராளுமன்றத்தை முடக்கி வச்சிருந்தாங்க. இதனால, ஜூலை 28-ம் தேதி மக்களவையில 16 மணி நேரமும், ஜூலை 29-ல் மாநிலங்களவையில 9 மணி நேரமும் விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கு.
இந்த விவாதத்துல பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பேசுறாங்க. இதுலயும், இன்று (ஜூலை 29, 2025) மாலை 7 மணிக்கு பிரதமர் மோடியும், பிற்பகல் அமித் ஷாவும் மக்களவையில பேசப் போறாங்க-னு தகவல் வந்திருக்கு. இது பாராளுமன்றத்துல பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தி ஆகியோரும் இன்று பேசுறாங்க, இது விவாதத்துக்கு இன்னும் தீவிரம் சேர்க்குது.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர்ல என்னதான் நடந்துச்சு!! காங்கிரஸ் - பாஜக காரசார விவாதம்..!

ஆபரேஷன் சிந்தூர் பற்றி அரசு சொல்லுது, “22 நிமிஷத்துல பயங்கரவாத முகாம்களை தரைமட்டமாக்கியது இந்திய ராணுவத்தின் வலிமையை காட்டுது.” பிரதமர் மோடி இதை “வெற்றியோட விழா”னு வர்ணிச்சிருக்கார். ஆனா, எதிர்க்கட்சிகள், குறிப்பா காங்கிரஸ், “இந்த ஆபரேஷனுக்கு முன்னாடி பாகிஸ்தானுக்கு தகவல் தரப்பட்டதா? பஹல்காம் தாக்குதலில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததா? டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் பண்ணாரா?”னு கேள்வி எழுப்பி அரசை வறுத்தெடுக்குது.
நேத்து (ஜூலை 28) மக்களவையில விவாதம் தொடங்குச்சு. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆபரேஷனோட வெற்றிகளை விளக்கி பேசினார். அமித் ஷா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்களும் குறுக்கிட்டு பதிலளிச்சாங்க. ஆனா, எதிர்க்கட்சிகள் திருப்தி அடையல. இதனால, இன்றைய விவாதம் இன்னும் பரபரப்பா இருக்கும்-னு எதிர்பார்க்கப்படுது.
இந்த விவாதத்துக்கு மத்தியில, துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர்னு ராஜினாமா பண்ணது பரபரப்பை அதிகப்படுத்தியிருக்கு. இந்தியா-பாகிஸ்தான் இடையே மூணு நாள் மோதல் நடந்து, ராணுவ மட்ட பேச்சுவார்த்தை மூலமா முடிச்சு வைக்கப்பட்டது. ஆனாலும், இந்த ஆபரேஷன் பற்றிய விவரங்களும், அதோட விளைவுகளும் இன்னும் முழுமையா வெளியாகல. இதனால, மோடி மற்றும் அமித் ஷாவோட இன்றைய உரை, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லப் போகுது-னு எல்லாரும் ஆவலோட காத்திருக்காங்க.
இதையும் படிங்க: பேனா உடைஞ்சதா? பென்சில் உடைஞ்சதானு கேக்காதீங்க!! எக்சாம் ரிசல்ட் என்னானு பாருங்க!! ராஜ்நாத் சிங் நச்!!