ரணில் விக்ரமசிங்கே 1993-1994, 2001-2004, 2015-2018, 2018-2019 மற்றும் 2022 ஆகிய காலகட்டங்களில் இலங்கையின் பிரதமராகப் பதவி வகித்தார். குறிப்பாக, 2022இல் இலங்கை பொருளாதார நெருக்கடியால் கடும் அரசியல் குழப்பம் நிலவிய வேளையில், கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதைத் தொடர்ந்து, அவர் இடைக்கால ஜனாதிபதியாக 2022 ஜூலை முதல் 2024 வரை பதவியேற்றார்.
இந்தக் காலகட்டத்தில், இலங்கையின் பொருளாதார மீட்புக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, நாட்டின் நிதி நிலைமையை ஓரளவு உறுதிப்படுத்த முயற்சித்தார். இருப்பினும், அவரது ஆட்சிக்காலம் பல சர்ச்சைகளையும் எதிர்கொண்டது. முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். சிறைச்சாலை பேருந்தில் கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். லண்டனுக்கு ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட பயணம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) சென்றிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவரது ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. கைதுக்கு பின்னர், அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வரும் ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார். சிறையில் வைக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்கே உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, மருத்துவர்களின் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: அரசு நிதியில் பயணம்.. எழுந்த பரபரப்பு புகார்.. இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது..!!
இதையும் படிங்க: #BREAKING: மீனவர்கள் என்ன கிள்ளு கீரையா? இலங்கை கடற்படையை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்... தண்டவாளத்தில் அமர்ந்து முழக்கம்