வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
அரசியல்

இருமொழி கொள்கையால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர் – ஆளுநர் ரவி

இருமொழி கொள்கையால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைத்தளத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள பதிவில்,தென் தமிழகத்தைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடியதாக கூறியுள்ளார்.

 இந்த பகுதி மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும் புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருவதாக கூறியுள்ளார். தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக மக்கள் உணர்கிறார்கள் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தி மொழிய திணிக்காதீங்க..! கையெடுத்து கும்பிட்ட நடிகர் வடிவேலு…!

மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள் என கூறியுள்ள ஆளுநர், மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருமொழிக் கொள்கையால் அண்டை மாநிலங்களை விட தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது என கூறியுள்ளார். தமிழகத்தில் மும்மொழி கொள்கை தொடர்பான பிரச்சனை முடித்து வரும் நிலையில் மும்மொழி கொள்கை என்பது தமிழகத்திற்கு மிக அவசியம் என ஆளுநர் ரவி கூறியிருப்பது மீண்டும் பேசுப் பொருளாக மாறி உள்ளது.

இதையும் படிங்க: தனித்து இயங்கும் தமிழ்மொழி.. ஒன்றிய ஆட்சியாளர்கள் கண்ணை உறுத்துகிறது… முதலமைச்சர் ஸ்டாலின்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी