கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார். அதிமுக தலைமை மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தான் மனம் திறந்து பேசப்போவதாக தெரிவித்து இருந்தார்.
தமிழக மக்கள் அனைவரும் உங்கள் முடிவை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், காலையில் எழுந்தவுடன் விளையாடி விடாதீர்கள் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்வதாக செங்கோட்டையனுக்கு அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி வலியுறுத்தி இருந்தார். இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன இன்று ஆக்கி விடாதீர்கள் என்றும் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஊற்றி முழுகும் வேலையெல்லாம் வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

ஏழு முறை வெற்றி பெற்ற நீங்கள் மீண்டும் பழனிச்சாமியின் தலைமையை ஏற்று சென்றீர்கள் என்றால் மக்கள் மட்டுமல்லாது உங்கள் ஆதரவாளர்கள் கூட ஓட்டு போட மாட்டார்கள் என்று கூறினார். எனவே நல்ல முடிவு எடுங்கள் என்று செங்கோட்டையனுக்கு புகழேந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: மறுபடியும் இபிஎஸ் பக்கம் போனா சோலி முடிஞ்சிடும்! நல்ல முடிவெடுங்க... செங்கோட்டையனுக்கு புகழேந்தி வேண்டுகோள்
அதற்கேற்றார் போல் அனைவரும் ஒன்றிணை வேண்டும் என்ற வலியுறுத்தலை தான் செங்கோட்டையன் தெரிவித்தார். கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டை என் கூறி இருக்கிறார். இது தொடர்பாக பேசிய புகழேந்தி, செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி குறித்து வெளிப்படையாக தெளிவாக பேசி இருக்க வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதைத்தான் தாங்களும் வலியுறுத்தி வருவதாக தெரிவித்த புகழேந்தி, பத்து நாட்கள் கெடு விதித்து இருக்கிறார் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் எனக் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: சசிகலா உள்ளிட்டோரை அரவணையுங்கள்! பரபரக்கும் அரசியல் சூழலில் மனம் திறந்த செங்கோட்டையன்…