எப்போதும் பெருமை பேசும் பாகிஸ்தான் தலைவர்களுக்கு சர்வதேச அளவில் துளியும் மதிப்பு கிடையாது. இது ஏற்கனவே பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது, பாகிஸ்தானின் மிக முக்கியமான நபரான பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்லும்போது சிறிதும் மதிக்கப்படுவதில்லை என்பதற்கு மற்றொரு உதாரணம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் பதவியில் இருக்கும் அசிம் முனீர், சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 62வது மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கச் சென்றார். அங்குள்ள பாதுகாப்புப் பிரிவினரால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டிற்காக தனது குழுவுடன் ஜெர்மனிக்குச் சென்றிருந்த அசிம் முனீர் உள்ளே சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் அவரைத் தடுக்க முயன்றதோடு, “அடையாள அட்டை எங்கே?” என்று அவர்கள் அவரிடம் கேட்டார்கள். அசிம் முனீர் மற்றும் அவரது ஊழியர்கள் தன்னிடம் அது இருப்பதாகக் கூறியபோது.. அவரது அடையாள அட்டையை தெரியும்படி வைத்திருக்கச் சொன்னார்கள். இது அசிம் முனீருக்கு சற்று அவமானகரமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், பலர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சிலர் இதை ஒரு ராஜதந்திர சங்கடம் என்று வர்ணித்துள்ளனர், மற்றவர்கள் இது போன்ற உயர் மட்ட நிகழ்வுகளில் இது ஒரு சாதாரண பாதுகாப்பு நெறிமுறை என்று கூறியுள்ளனர். முன்னாள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி அடில் ராசா இந்த சம்பவத்திற்கு நையாண்டியாக பதிலளித்தார். சர்வதேச தளங்களில் அசிம் முனிரை யாரும் அங்கீகரிப்பதில்லை எனக்கூறினார். பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் அசிம் முனிரை மியூனிக் பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைத்ததற்கு எதிராக ஜெர்மனியில் கடும் எதிர்ப்பு உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் கடுமையான மனித உரிமை மீறல்களைச் செய்து வருவதாக சில அரசியல் அமைப்புகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இந்த சூழலில், மியூனிக் பாதுகாப்பு மாநாட்டிலும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு..! தொழுகையின் போது நேர்ந்த தாக்குதல்... 15 பேர் பலி..!
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு சென்றிருந்த போது பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் பெரும் அவமானத்தை எதிர்கொண்டார். அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் அசிம் முனீருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி அவரைத் தடுக்க முயன்றனர், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டங்களின் வீடியோக்களும் வைரலாகியுள்ளன.
இதையும் படிங்க: பலுசிஸ்தானில் பயங்கர துப்பாக்கிச் சூடு..!! 15 பாக். வீரர்கள், 92 பயங்கரவாதிகள் பரிதாப பலி..!!