நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து நேற்று மதியம் நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் இன்று விடியற்காலை 3 மணி அளவில் வேதாரண்யத்தை அடுத்த ஆதுக்காட்டு துறை மீனவ கிராமம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு இலங்கையைச் சார்ந்த மூன்று கடல் கொள்ளையர்கள் ஒரு பைப்பர் படகில் வந்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான படகில் இருந்த நான்கு பேரையும்,மணிவாசகன் என்பவருக்கு சொந்தமான படகில் இருந்த நான்கு பேரையும்,சதீஷ் என்பவருக்கு சொந்தமான படையில் இருந்த நான்கு மீனவர்களையும்,கோபால் என்பவருக்கு சொந்தமான மீன்பிடிப்படையில் இருந்த நான்கு மீனவர்களையும் இலங்கை கடற் கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி மீனவர்களிடமிருந்த ஜிபிஎஸ் கருவி, மீன்பிடி வலை ,செல்போன் போன்றவற்றை பறித்து கொண்டு கட்டையால் தாக்கியுள்ளனர்.
அப்போது பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான படகில் இருந்த என்ஜினை கழற்ற முயன்ற அயந்தன் இவர் கே எஸ் மாவட்டம் ஸ்ரீலங்காவை சார்ந்தவர். இவர் தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக மீனவர்களை தாக்கி மீனவர்களின் பொருட்களை சேதப்படுத்தி பொருட்களை அள்ளி சென்றவற கடற்கொள்ளையர்களின் தலைவன் என மீனவர்கள் கூறுகின்றனர்.
அயந்தனை சிறைபிடித்த தமிழ்நாடு மீனவர்கள் கரைக்கு வரும் பொழுது வியந்தனுக்கும் மீனவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது அதில் அயந்தன் காயமடைந்து உள்ளார்.பின்னர் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் போலீசார் அயன்தனை வேதாரண்யத்தில் உள்ள நாகை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். அயந்தனுடன் வந்த மற்ற இரண்டு மீனவர்களும் தப்பித்து ஓடி உள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் 10க்கு 3 கன்பார்ம்!! கொங்கு கோட்டையில் விழும் ஓட்டை!! அதிமுக - பாஜ கூட்டணியை அசைக்கும் திமுக!
இதையும் படிங்க: அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தி! ஆர்.எஸ்.எஸ் தீவிர ஆலோசனை! கோவை தெற்கில் கோலோச்சுமா பாஜக?!