தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி சிறையில் இருந்து அக்டோபர் 26 ஆம் தேதி இரவு 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் ஒரே பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஒருவர் திடீரென வலிப்பு வந்தது போல் நடித்து நாடகம் ஆடியுள்ளார்.
உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி காவலர்களின் கவனத்தை ஈர்த்த பின்னர், உள்ளே வந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு கதவுகளைத் திறந்து கொண்டு 17 பேரும் ஒரே நேரத்தில் தப்பி ஓடியுள்ளனர்.இந்தச் சம்பவம் நடந்த உடனேயே காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியது.

தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் வாகனச் சோதனைகள் மற்றும் காடு, மலைப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சியின் விளைவாக தப்பிய 17 கைதிகளில் 15 பேரை போலீசார் பிடித்துள்ளனர். தற்போது மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சுள்ளான் மதன் விவகாரத்தில் போலீஸ் அதிரடி.. சிக்கிய 13 பேர்..!! முடக்கப்பட்ட 77 சோசியல் மீடியா கணக்குகள்!!
இதனால் பெரும்பாலானோர் மீண்டும் சிறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள இரண்டு கைதிகளையும் பிடிக்க காவல்துறையினர் வலைவீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர். அண்டை மாவட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளிலும் தேடுதல் தொடர்கிறது.இந்தச் சம்பவத்தால் சிறைப் பாதுகாப்பு முறைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: "வீர வணக்கங்கள்"..! காவலர் நினைவு நாள்..! முதல்வர் விஜய் மரியாதை..!!