வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
உலகம் ›

இதுதான் கடைசி வார்னிங்.. மறுபடியும் சொல்லமேட்டேன்.. ஹமாஸ் அமைப்பை எச்சரித்த டிரம்ப்..!!

பணய கைதிகள் வீடு திரும்ப வேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் 1,139 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சனை போராக மாறியது. இந்த சம்பவத்திற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் இந்த போரில், காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.  

250 பேரை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர். பதிலடி கொடுக்கவும், பிணைக்கைதிகளை மீட்கவும் தான் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல். டிரம்ப் அதிபரானதும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஏராளமான பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அனைத்து பயங்கரவாதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால் 60 நாட்களில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால் தான் 2 மாதம் முன்பு மீண்டும் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல்.

இதையும் படிங்க: No more talks!! அடம்பிடிக்கும் ட்ரம்ப்!! சிக்கலில் வர்த்தகப் பேச்சுவார்த்தை!!

இந்த முறை ஹமாஸ் பயங்கரவாதிகளை அடியோடு விரட்டி விட்டு மொத்த காசாவையும் கைப்பற்றும் நோக்குடன் தீவிர போரில் இறங்கியது. முன் எப்போதும் இல்லாத அளவு காசாவில் தரை வழியாகவும், வான் வழியாகவும் தீவிர தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸ் தீவிரவாதிகள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களை விடுதலை செய்துவிட்டு இருதரப்பும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். காசாவில் 60 நாள் சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கடந்த கூறினார். ஆனால், ஹமாஸ் அமைப்​பினர் இதை ஏற்​றுக்​கொள்​ளாமல், உண்​மை​யான சண்டை நிறுத்​தத்​துக்கு இது வழி​வகுக்​குமா என கேள்வி எழுப்பி வரு​கின்​றனர். இதனால் காசா​வில் இஸ்​ரேல் ராணுவம் தனது தாக்​குதலை தொடர்​கிறது.

இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர மற்றும் பணய கைதிகளை விடுவிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், பணய கைதிகள் வீடு திரும்ப வேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.

இந்த போர் முடிவுக்கு வரவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். இஸ்ரேல் அரசு என்னுடைய விதிமுறைகளை ஏற்று கொண்டது. ஹமாஸ் அமைப்பும் இதனை ஏற்று கொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளது. அப்படி ஏற்று கொள்ளவில்லை என்றால், விளைவுகளை பற்றி ஹமாஸ் அமைப்புக்கு நான் எச்சரிக்கை விடுத்து இருக்கிறேன். இது என்னுடைய கடைசி எச்சரிக்கை. மற்றொரு முறை எச்சரிக்கமாட்டேன். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்காக உங்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: கடனில் மூழ்கப்போகும் அமெரிக்கா… அப்பாவி மக்களின் அடிமடியில் கைவைக்க திட்டமிடும் டிரம்ப்…! 

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी