இஸ்ரேலுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானங்களைத் தனது வான்வெளி (Airspace) வழியாகப் பறக்க அனுமதிக்காத பிரான்ஸ் நாட்டின் முடிவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இஸ்ரேலுக்குத் தேவையான அவசர ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்ற அமெரிக்கப் போக்குவரத்து விமானங்களைத் தனது எல்லைக்குள் பறக்கப் பிரான்ஸ் அரசு அனுமதி மறுத்துள்ளது. இஸ்ரேலுக்குச் செல்லும் ராணுவ விநியோக விமானங்களைப் பிரான்ஸ் தனது எல்லைக்குள் நுழைய விடவில்லை. பிரான்ஸின் இந்தச் செயல் மிகவும் உதவியற்றது (VERY UNHELPFUL) என ட்ரம்ப் சாடியுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளிலும் பிரான்ஸ் உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஈரான் விவகாரத்தில் பிரான்ஸ் ஒரு செயலற்ற நாடாகவே இருந்துள்ளது. அமெரிக்கா செய்த உதவிகளைப் பிரான்ஸ் மறந்துவிட்டது, ஆனால் அமெரிக்கா இதனை நிச்சயம் நினைவில் வைத்திருக்கும் (The U.S.A. will REMEMBER) என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஈரான் உளவுத்துறை அமைச்சர் பலி! இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி அறிவிப்பு!
பிரான்ஸ் மட்டுமன்றி, ஈரான் விவகாரத்தில் தங்களுக்குத் தோள் கொடுக்காத பிரிட்டன் போன்ற நாடுகளையும் ட்ரம்ப் விமரிசித்துள்ளார். "உங்களுக்குத் தேவையான எரிபொருளை நீங்களே தேடிக்கொள்ளுங்கள். அமெரிக்கா இனி உங்களுக்காகப் போராட வராது" என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரானின் அப்போதைய உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழலில், சர்வதேசச் சட்டங்களை மீறி இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் கூறி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே தற்போது வான்வெளி அனுமதி மறுப்பும், ட்ரம்ப்பின் கண்டனமும் நிகழ்ந்துள்ளன.
இதையும் படிங்க: இஸ்ரேல் அதிரடி தாக்குதல்! ஈரானின் பாசிஜ் படை தளபதி சுலைமானி கொல்லப்பட்டதாக அறிவிப்பு!