துணை குடியரசு தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று இருப்பது தமிழகத்திற்கு மகிழ்ச்சி சேர்க்கும் விஷயம் என தெரிவித்துள்ளார். சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டை சேர்ந்தவர் மட்டுமல்ல என்றும் அவர் ஒரு நேர்மையான நல்ல மனிதர் என்றும் கூறினார். அவர் வெற்றி பெற்றது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். நயினார் நாகேந்திரன் தான் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற காரணம் என்றும் எடப்பாடி பழனிச்சாமியை நயினார் தூக்கிப்பிடித்தது தான் அமமுக கூட்டணியில் இருந்து வெளியேற காரணம் என்றும் ஏற்கெனவே டிடிவி தினகரன் பேசி இருந்தார்.கூட்டணியை வழிநடத்த நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை டிடிவி தினகரன் முன் வைத்திருந்தார்.
கூட்டணியிலிருந்து வெளியேறும் பின்னணியில் அண்ணாமலை இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். தன்னை சந்திக்கவே எடப்பாடி பழனிச்சாமி தயங்குவார் எனக் கூறினார். 2021 இல் அதிமுக வெற்றி பெறாமல் இருந்ததற்கு என்ன காரணம் என அனைவருக்கும் தெரியும் எனக் கூறிய டிடிவி தினகரன், பேச தயார் என செய்தியாளர்களிடம் கூற வேண்டிய காரணம் என்ன என்றும், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக நான் ஏற்றுக் கொள்வேன் எனக் கூறியது இல்லை என்றும் தெரிவித்தார். ஓ பன்னீர்செல்வம் கூட்டணியை விட்டு வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்றும், அதிமுகவோடு இணைந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் எப்படி பணியாற்ற முடியும் என்று கேட்டார். இந்த நிலையில் தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர் நயினார் நாகேந்திரன் என்று கூறினார்.

கூட்டணியில் இருந்து தான் வெளியேறும்போது எல்லா காரணங்களையும் சொன்னேன் என்றும் தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் எந்தவிதமான மனவருத்தமும் கோபமும் கிடையாது எனவும் ஒரு நண்பராக அவர் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வர்ற தேர்தல்ல சம்பவம் இருக்கு! நாங்க யாருன்னு பாப்பீங்க... TTV தினகரன் பரபரப்பு பிரஸ்மீட்..!
அண்ணாமலை கட்சியை அரவணைத்து செல்வதாக கூறிய டிடிவி தினகரன், செங்கோட்டையனின் நல்ல முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பது அம்மாவின் தொண்டர்கள் அனைவரின் விருப்பம் என்றும் அவரது முயற்சி நிச்சயம் வெற்றி அடையும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம்! சிக்னல் காட்டிய சசிகலா! மனம் திறந்த செங்கோட்டையன்...