வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

உடனே செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துங்க… TVK மாவட்டச் செயலாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு..!!!

அனைத்து மாவட்டங்களையும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய், கட்சியின் அடித்தள வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளது, தற்போதைய அரசியல் சூழலில் கட்சியின் தேர்தல் தயாரிப்புகளுக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாக பார்க்கப்படுகிறது .

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெகவின் அமைப்பு ரீதியான வலிமையை அதிகரிப்பது, தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்துவது, பூத் அளவிலான பணிகளை துரிதப்படுத்துவது போன்ற பல்வேறு இலக்குகளை முன்னிலைப்படுத்தியே இந்த உத்தரவு வந்துள்ளது. ஏற்கனவே மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும், சேலத்தில் நடந்த பிராந்திய கூட்டத்திலும் விஜய் தனது பேச்சுகளில் கட்சியின் அடித்தளப் பணிகளை வலியுறுத்தியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாகவே இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக செயல்வீரர்களை ஒன்றிணைக்கும் கூட்டங்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்கள் வரும் முதல் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய அளவு நிர்வாகிகள், கிளைப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து அடுக்கு தொண்டர்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: விஜய்க்கு ஓட்டு போடுங்க… விசிலுக்கு ஓட்டு போடுங்க..!! தீவிர வாக்குச் சேகரிப்பை தொடங்கிய செங்கோட்டையன்…!!

கூட்டங்களில் தேர்தல் பணிகள், பிரச்சார உத்திகள், பூத் கமிட்டி வலுப்படுத்துதல், மக்கள் பிரச்சினைகளை அடையாளம் காணுதல் போன்றவை மையப் பேசுபொருள்களாக இருக்கும். மேலும், விஜய்யின் பொதுக்கூட்ட சுற்றுப்பயணங்கள், நலத்திட்டங்கள், அரசியல் அறிவிப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: டைம் பாஸுக்கு கட்சி நடத்துறாரு சீமான்…! அதெல்லாம் கண்டுக்காதீங்க… தவெக நிர்மல் குமார் தாக்கு..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी