மத்திய அரசின் விஞ்ஞான புரஸ்கார் விருது இந்தியாவின் விஞ்ஞானத் துறையில் உயர்ந்த அங்கீகாரமாகத் திகழ்கிறது. இது விஞ்ஞானிகளின் அசாதாரண பங்களிப்புகளைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு தேசிய விருது அமைப்பாகும். இந்திய அரசின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை இதன் முதன்மை நிர்வாகியாகச் செயல்படுகிறது. இவ்விருது 2024-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இதற்கு முன்பு இருந்த ஷாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு போன்ற பல்வேறு விருதுகளை ஒருங்கிணைத்து, ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் நோக்கில் இது உருவாக்கப்பட்டது.
இவ்விருதின் பின்னணி 2023-ஆம் ஆண்டு தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை சட்டம் இயற்றப்பட்டதில் தொடங்குகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் விஞ்ஞான ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு, கொள்கை வகுப்பு மற்றும் விருது வழங்கல் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டன. அதன் விளைவாக, பழைய விருதுகளான ஷாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு, CSIR-இன் பல்வேறு விருதுகள், DBT-யின் தேசிய உயிரித் தொழில்நுட்ப விருதுகள் போன்றவை ராஷ்ட்ரிய விஞ்ஞான புரஸ்கார் என்ற ஒரே திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டன.

துறை சார்ந்த நிபுணர் குழு ஆராய்ச்சி தரம், தாக்கம், புதுமை ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது. பின்னர் உயர்மட்ட தேர்வுக் குழு இறுதி முடிவெடுக்கிறது. இதனிடையே 2025 ஆண்டுக்கான மத்திய அரசின் ராஷ்டிரிய விஞ்ஞான புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: அதிரடியாக களத்தில் இறங்கிய மத்திய அரசு..!! ஓலா, ஊபருக்கு ஆப்பு வைக்க வருகிறது 'பாரத் டாக்ஸி'..!!
சென்னை ஐஐடியைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் ராஷ்டிரிய விஞ்ஞான புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மோகன சங்கர் சிவப்பிரகாசம், பிரதீப், ஸ்வேதா பிரேம் அகர்வாலுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு Cough syrup கொடுக்கக்கூடாதா..?? மத்திய அரசின் அட்வைஸ் என்ன..??