தமிழ்நாட்டின் அரசியல் களத்தில், நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் மூலம் படிப்படியாக இடம் பிடிக்கத் தொடங்கியிருக்கிறார். தமிழக அரசியல் களத்தில் புதிய அலை என்னும் நிலையில் நடிகர் தளபதி விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதிலிருந்து திமுக ஆட்சியையும், அதன் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. விஜய், தனது திரைப்பட வாழ்க்கையிலிருந்து அரசியலுக்கு இடைவிடை செய்தாலும், அவரது பேச்சுகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஸ்டாலின் ஆட்சியின் பல துறைகளை இலக்காகக் கொண்டு தாக்கி வருகிறார்.
இந்த விமர்சனங்கள், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தளத்தில் TVK-ஐ முதன்மை எதிர்க்கட்சியாக உயர்த்தும் நோக்கத்துடன் நடைபெறுகின்றன. ஸ்டாலினின் 'அப்பா' பிம்பத்தை சீண்டும் வகையில் ஸ்டாலின் அங்கிள் என்று அழைத்து விமர்சிக்கும் விஜய், ஊழல், சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்ற விஷயங்களை மையமாகக் கொண்டு தனது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறார்.விஜயின் அரசியல் பிரவேசம், தமிழகத்தில் ஏற்கனவே நிலவும் பன்முக அரசியல் போட்டியை மேலும் சூடாக்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு, அவர் மேற்கொள்ளும் மாநில அளவிலான பிரச்சாரப் பயணம், குறிப்பாக சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் இந்தப் பயணம் அரசியல் வட்டங்களில் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டு உள்ளது.

செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சி, பெரம்பலூர், அரியாலூர் மாவட்டங்களில் தொடங்கிய இந்தப் பயணம், டிசம்பர் வரை 38 மாவட்டங்களையும் உள்ளடக்கியது. ஆனால், இந்த சனிக்கிழமை உத்திbஅவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல விமர்சனங்களை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: நேற்று இபிஎஸ்... இன்று விஜய்... தவெகவிற்கு கிரீன் சிக்னல் காட்டிய காவல்துறை...!
இந்த நிலையில், நான் சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியில் வரும் ஆள் இல்லை என்று விஜய்யை மறைமுகமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். வாரத்தில் 4-5 நாட்கள் வெளியூரில்தான் இருப்பேன் என்று அவர் கூறியிருந்தார். விஜயை விமர்சித்த உதயநிதி ஸ்டாலினை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சனிக்கிழமை மட்டும் வெளியில் வந்ததற்கே கதறுறீங்க… இதுல 32 நிபந்தனை வேற… வாரத்துல நாலு நாள் வந்தா அழுதுடுவிங்க எனது விமர்சித்துள்ளனர். அப்டியே எல்லா நாலும் வந்து செங்குத்தா தூக்கி நிப்பாட்டிடாப்ல என்றும் உங்களுக்கு இதான் கடைசி தேர்தல் இதுக்கு பின்னாடி நீங்க ஆட்சியயே நினச்சு கூட பாக்க கூடாது எனவும் கூறி உள்ளனர். வாரம் ஒரு நாள் வந்ததற்கே ப்ரமோஷன் செய்கிறீர்கள் என்றும் எல்லா நாளும் வந்தால் என்ன நடக்கும் எனவும் பலதரப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தவெகவிற்கு தொடரும் நெருக்கடி... காலையிலேயே வெளியான ஷாக்கிங் நியூஸ்... விஜய் எடுத்த அதிரடி முடிவு...!