ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் என்ற பகுதியில தவெக பிரச்சார கூட்டம் என்று நடக்கிறது. 11 மணியிலிருந்து ஒரு மணி வரை இந்த கூட்டம் நடக்க இருக்கக்கூடிய நிலையில் இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் இன்று பிரச்சார கூட்டம் நடைபெறக்கூடிய இடத்தில் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து எட்டு மணிக்கு பிறகு கட்சியினர் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வந்து காலை 8 மணிக்கு முன்பாகவே. அதாவது அதிகாலையில் இருந்தே கொச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு முன்பாக தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர்.
தொடர்ந்து காவல் துறையினர் வந்து அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள். மேலும் நுழைவாயில் முன்பு குவிந்த தவெகவினரிடம் 8 மணிக்குத் தான் அனுமதி வழங்குவோம், அதன் பிறகு வந்தால் போதும் என எடுத்துரைத்தனர். ஆனால் வெளியூரில் இருந்து ஏராளமான தவெகவினர் அதிகாலையிலேயே மக்கள் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டனர். காவல்துறை காலை 6 மணியில் இருந்தே பாதுகாப்பை தீவிரப்படுத்தினார்கள். அதற்கு முன்பாகவே தொண்டர்கள் வந்துவிட்ட நிலையில் நுழைவு வாயிலுக்கு முன்பு திரண்டிருந்த இளைஞர்களால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்ப்பதற்காக நுழைவாயிலில் அதிகாலை முதலே காத்திருந்தவர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர். அப்போது தவெக தொண்டர்கள் விஜயைப் பார்க்க முன்வரிசையில் நிற்க வேண்டும் என்பதற்காக, உள்ளே நுழைந்ததும் முண்டியடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தனர்.
அதாவது விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள இடத்தில் முன்வரிசையில் 8 பெட்டிகள் உள்ளன. அந்த 8 பெட்டிகள் மற்றும் பக்கவாட்டில் உள்ள பெட்டிகள் விஐபி பாக்ஸாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முக்கியமான நபர்கள் அங்கே நிற்கக்கூடிய வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிறகு இரண்டாவது வரிசையில் எட்டு பெட்டிகள் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் உள்ளே நுழைந்த இளைஞர்கள், விஐபி பாக்ஸ் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளை நோக்கி படையெடுத்த போது, அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி மூன்றாவது வரிசையில் உள்ள பெட்டிக்கு செல்ல வலியுறுத்தினர். அப்போது அவர்கள் அந்த பெட்டிக்குள் போட்டி போட்டுக்கொண்டு நுழைந்தனர். ஒரு பெட்டிக்குள் அளவுக்கு அதிகமான ஆட்கள் நுழைந்து விடக்கூடாது என்பதால் அதனை சரி செய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: விஜயின் ஈரோடு பிரச்சாரம்… என்னென்ன ஏற்பாடுகள் செஞ்சுருக்கீங்க? SP நேரில் ஆய்வு…!
35,000 பேர் வரை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு பெட்டிக்கு 600 பேர் நிற்கும் வீதம் 60 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியும் 30 அடி வந்து அகலமும் 110 அடி நீளமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 500 பேருக்கு மேல் கூட்டம் கூடினாலே காவலர்கள் வேறு பெட்டிக்கு ஆட்களை அனுப்பி வருகின்றனர். ஆனால் விஜயைக் காண முதல் வரிசையில் நிற்க வேண்டும் என முண்டியடிக்கும் தொண்டர்களை முறையாக நிற்க வைப்பதற்காகவும், நுழைவாயிலில் கட்டுக்கடங்காத கூட்டத்தை நெறிப்படுத்துவதற்காகவும் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் இளைஞர்கள் அங்கும், இங்கும் தெறித்து ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் முன்னாடியே இப்படியா..?? ஈரோட்டில் அடித்துக்கொண்ட தவெகவினர்..!! என்ன நடந்தது..??