இந்தியாவின் பாதுகாப்பு எந்தநாடும் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் கட்மைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதற்கு இஸ்ரோ விண்வெளி மையம் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களின் வாழ்விடங்களை அழித்தது. இந்தியாவுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ட்ரோன்களையும், ஏவுகணைகளை வீசித் தாக்கியது, இதை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முடியடித்தது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் உருவான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தம் காரணமாக இரு நாடுகளும் போரை நிறுத்துவதாக அறிவித்தன.

இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக எல்லைப் பகுதிகளில் துப்பாக்கிச் சத்தம், ஏவுகணை சத்தம், விமான சத்தம் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் குஜராத் எல்லைப்பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் ஏவுகணைகளை வீசி அமைதியைக் குலைக்க பாகிஸ்தான் திட்டமிட்டது. அனைத்து செயல்களையும் இந்திய ராணுவம் முறியடித்தது. பாகிஸ்தானில் இருக்கும் 11 விமானத் தளங்களை இந்திய ராணுவம் தாக்கி அளித்து அந்நாட்டு ராணுவத்து குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதிலும் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு..! அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி..!

இருப்பினும் முன்போல் அல்லாமல் எல்லைப்பகுதிகளில் கடந்த இரு நாட்களாக துப்பாக்கிச்சூடு, விமானச் சத்தம் இல்லாமல் இருக்கிறது என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவின் பாதுகாப்புக்கு இஸ்ரோ வித்தியாசமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இஸ்ரோவின் தலைவர் என். நாராயணன், இம்பால் நகரில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவின் பாதுகாப்புக்கு இஸ்ரோ எந்த நாடும் செய்யாத வகையில் 24 மணிநேர கண்காணிப்புக்கு வசதி செய்துள்ளோம். இந்தியாவின் பாதுகாப்பில் எந்த நாடும் இடையூறு செய்யக்கூடாது என்பதற்காக 10 செயற்கைக்கோள்களை 24 மணிநேரமும் கண்காணிக்க அமர்த்தியுள்ளோம்.
பாகிஸ்தானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பாதுகாப்பு முக்கியமானது. 24 மணிநேரமும் நாட்டின் பாதுகாப்பு, கண்காணிப்பில் 10 செயற்கைக்கோள்கள் ஈடுபட்டுள்ளன, சிறிய தவறு நேர்ந்தாலும் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு செயற்கைக்கோள் தகவல் அனுப்பிவிடும்.

நம் அண்டை நாடு குறித்து நமக்குத் தெரியும். நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமானால், நம்முடைய செயற்கைக்கோள்களை பயன்படுத்தி கண்காணிக்க வேண்டும். நமது 7,000 கி.மீ கடற்கரைப் பகுதிகளை நாம் கண்காணிக்கிறோம், வடக்குப் பகுதி முழுவதையும் நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் இல்லாமல், நாம் அதை அடைய முடியாது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார் இந்திய விமானப்படை கேப்டன்... யார் இவர்?