தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்ததிலிருந்து அவர் கரூருக்கு செல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்கவில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், விரைவில் விஜய் கரூருக்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து விஜய் சந்திக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நாளை காலை கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திக்கும் உள்ளார். கரூருக்கு விஜய் செல்லாமல் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து பேசுவதை பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைப்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லது என்றும் மீண்டும் கரூருக்கு சென்றால் அசம்பாவிதம் நிகழலாம் என்பதால் விஜய் செல்லவில்லை என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். விஜயை அழைக்கவில்லை வந்தால் வரவேற்போம் என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். விஜய் வரவில்லை என்று சொன்னாலும் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது என்றும் கூறியுள்ளார். விஜய் ஒரு ஸ்டார் நடிகர் என்றும் அவருக்கு என்று ஒரு மாஸ் இருக்கிறது., அதை மறுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: MGR சிலை உடைப்பு... உடனடியா நடவடிக்கை எடுங்க... பொங்கி எழுந்த EPS...!
அவரது நடிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்றும் விஜய் அரசியலுக்கு அவை ஓட்டாக மாற வேண்டும் என்றால் பயிற்சியாளர்கள் தேவை என்றும் அந்த பயிற்சியாளர்களாக அதிமுக இருக்கும் என்றும் கூறினார். 41 குடும்பங்களுடன் மனம் விட்டு பேச வேண்டும் என்பதற்காக விஜய் நேரில் அழைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: புளுகு மூட்டை இபிஎஸ்... அம்புட்டும் தப்பு கணக்கு..! முதல்வர் ஸ்டாலின் விளாசல்...!