ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலைத் தொடர்ந்து பிரதமருடன் பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளதோர் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இன்று மதிய அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தபோது பிகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி.. விளாசிய கார்கே!

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மோடி அரசின் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஆதரவு.. ஒரே குரலில் ஒலித்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்.!