ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவில், இந்து பக்தர்களின் முக்கியமான புனித தலங்களில் ஒன்றாகும். இந்த கோவில், 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பனிலிங்கத்திற்கு பிரசித்தி பெற்றது. அமர்நாத் யாத்திரை, இந்து மதத்தில் மிக முக்கியமான புனிதப் பயணங்களில் ஒன்றாகும். இந்த ஆண்டு (2025) ஜூன் 25 முதல் ஆகஸ்ட் 9 வரை 47 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கோயிலில், பனி லிங்கமாக விளங்கும் சிவபெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்கின்றனர். இந்த பனி லிங்கம் மே முதல் ஆகஸ்ட் வரை உருவாகி, வளர்பிறை மற்றும் தேய்பிறையில் மாறுபடுவதாக நம்பப்படுகிறது.

இந்த ஆண்டு யாத்திரை கடந்த 3ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மலை மீட்புக் குழுக்கள் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளன. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பதிவு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தொடங்கியது.
இதையும் படிங்க: ஹர ஹர மகாதேவா! துவங்கியது அமர்நாத் யாத்திரை! பனி லிங்கம் தரிசனம் காண புறப்பட்ட பக்தர்கள்..!
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பல்டால் ஆகிய இரு பாதைகள் வழியாகவும் பக்தர்கள் யாத்திரையாக சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். அமர்யாத் யாத்திரையை முன்னிட்டு பக்தர்களுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாத்திரை தொடங்கியதில் இருந்து நேற்று வரை, அதாவது 19 நாளில் 3.21 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 9-ம் தேதி ரக்சா பந்தன் வரை அமர்நாத் யாத்திரை நடைபெறும்.

இருப்பினும், கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்திய ராணுவம் பக்தர்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைத்தது. பார்வதி தேவிக்கு சிவபெருமான் முக்தியின் ரகசியத்தை உபதேசித்த இடமாக இந்த குகை கருதப்படுகிறது. இந்த யாத்திரை பக்தர்களுக்கு ஆன்மிக உணர்வையும், இயற்கையின் அழகையும் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
இந்நிலையில் இன்று ஜம்முவிலிருந்து 3,536 யாத்ரீகர்கள் புறப்பட்டனர். இவர்களில் 1,250 யாத்ரீகர்கள் 48 வாகனங்களில் இன்று அதிகாலை 3:33 மணிக்கு பால்டால் அடிவார முகாமிற்கு புறப்பட்டனர். 2,286 யாத்ரீகர்கள் 84 வாகனங்களில் அதிகாலை 4:06 மணிக்கு பஹல்காம் அடிவார முகாமிற்கு புறப்பட்டனர். அடிவார முகாம்களுக்கு வருகை தரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் இவர்கள் அடிவார முகாம்களில் இருந்து யாத்திரையை தொடங்குகிறார்கள்.
இதையும் படிங்க: எல்லாம் செந்தில்நாதனை காண.. பக்தர்களால் நிரம்பி வழிந்த திருச்செந்தூர்.. நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம்..!!