முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த மாவட்டமான சித்தூரில் உள்ள வி. கோட்டா நகரில் பிரபல பத்திரிகையின் நிருபர் ஓட, ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி. கோட்டாவில் பிரபல தெலுங்கு தின பத்திரிக்கையான ஆந்திர ஜோதியில் நிருபராக கடந்த 30 ஆண்டுகளாக ஜெகன்மோகன் ரெட்டி பணி புரிந்து வந்தார். இந்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் வ.கோட்டாவில் பிரஜாசக்தி நிருபர் சுப்ரமணியத்துடன் இணைந்து நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஜெகன் மோகன் ரெட்டியை கண்முடிதனமாக நடுரோட்டில் துரத்திச் சென்று வெட்டிக் கொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற சுப்ரமணியத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த சுப்ரமணியத்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி ஜெகன் மோகம் சடலத்தை பிரதே பரிசோனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜீன்ஸ், லெக்கின்ஸ் போடாதீங்க..! கடும் வெயிலால் அபாயம்..! மருத்துவர்கள் எச்சரிக்கை..!
இந்த கொலைக்கு முக்கிய காரணம் சில நாட்கள் முன்பு செம்மரக்கடத்தலில் உள்ளூரை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி எழுதிய கட்டுரையால் அதற்கு பழி வாங்கும் விதமாக இந்தப்கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகம் உள்ள நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பத்திரிகையாளர் அமைப்புகள் மற்றும் மக்களிடையே இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல சங்கங்கள் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளதோடு, இதற்குப் பொறுப்பானவர்கள் மீது விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளன.
சித்தூர் காவல் கண்காணிப்பாளர் திஷார் துடி, அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த குற்றவாளிகளால் இந்தக் கொலை நடந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். தனிப்பட்ட விரோதம் உள்ளிட்ட அனைத்துக் கோணங்களிலும் காவல்துறை விசாரித்து வருவதாக தெரிவித்த அவர், சுமார் 10 பேர் என நம்பப்படும் குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்காக ஆறு சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல்ல போரை நிறுத்துங்க!! ஹார்முஸை திறக்கலாம்!! அப்புறம் அணுசக்தி பற்றி பேசலாம்!! ஈரான் கறார்!!