சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலக்கூடிய மாணவி ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் தனக்கு வகுப்பு எடுக்கக்கூடிய பேராசிரியரான ஞானவேல் பாபு என்பவர் தனக்குதொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் போனிலும் தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக கடந்த மூன்று வருடங்களாக அந்த பேராசிரியர் தன்னை தொடர்ந்து நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக தனக்கு சாட் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தன்னை தனக்கு மட்டுமின்றி தனது தோழிகளுக்கும் இதுபோன்று பாலியல் ரீதியான மெசேஜ் மற்றும் தொல்லை கொடுத்து வருவதாகவும் அந்த மாணவி தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.
தான் நண்பர்களோடு வந்து பேசுவதை அவர் தவறாக பேசுவதாகவும், இரவு நேரத்தில தொடர்ச்சியாக போன் செய்து தொல்லை கொடுத்து வருவதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. தன்னை போல நிறைய மாணவிகள் இவரால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடிய கமிட்டியிலும் புகார் அளித்திருப்பதாகவும் மாணவி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளும் விதமாக, புகாரை அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி இருக்கிறார்கள். இந்த புகார் மீது துணை ஆணையர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். மாணவியிடம் இருந்து செல்போனைக் கைப்பற்றி, ஞானவேல் பாபு என்ற பேராசிரியர் அனுப்பி ஆபாச மெசேஜ்கள் முழுவதையும் போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... புகாரளிக்க சென்ற தாய், மகளுக்கு காவல்நிலையத்தில் நடந்த சோகம்...!
இவர் முழுவதுமாக கூறுவது உண்மைத்தானா? என்ற உண்மைத்தன்மை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அடுத்த கட்டமாக பேராசிரியர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2024ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு 30
ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றார். இதே பல்கலைக்கழகத்தில மீண்டும் ஒரு மாணவி பாலியல் தொடர்பான புகாரை பேராசிரியர் மீது கொடுத்திருக்கும் சம்பவமானது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காமக்கொடூரனுக்கு திமுக கொடி கட்டிய காரில் ராஜமரியாதை... சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் பகீர் சம்பவம்...!