• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணாமலைக்கு சீட் மறுப்பு? பாஜகவுக்கு பின்னடைவா? கோவையில் சறுக்குமா? சாதிக்குமா? தேஜ கூட்டணி!

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
    Author By Pandian Fri, 03 Apr 2026 15:22:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamaalai Will Not Contest TamilNadu Election 2026 BJP Releases 27 Candidates List

    பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை என உறுதியாகியுள்ளது. இது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏப்ரல் 3ஆம் தேதி பாஜக தரப்பில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன், அவினாசி (தனி) எல். முருகன், கோவை வடக்கில் வானதி சீனிவாசன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், விளவங்கோடு தொகுதியில் எஸ். விஜயதாரணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    அண்ணாமலை தேர்தலில் போட்டியிட மாட்டார் என முன்பே திட்டவட்டமாகக் கூறிவந்த நிலையில், அவரை போட்டியிட வைக்க தேசிய பாஜக தலைமை கடுமையாக முயற்சி செய்தது. கோவை வடக்கு தொகுதியை அண்ணாமலை கேட்டதாகவும், ஆனால் அந்தத் தொகுதி வானதி சீனிவாசனுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. வானதி ஏற்கனவே 2021ல் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றவர்.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி வரும் நேரமாச்சு!! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?! நயினார் நாகேந்திரன் கொடுத்த அப்டேட்!

    திருப்பூர் தெற்கு தொகுதியில் தங்கராஜும், மொடக்குறிச்சி தொகுதியில் சரஸ்வதியின் மருமகள் கிருத்திகா சிவகுமாரும் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். அண்ணாமலைக்கு திருப்பூர் தெற்கு அல்லது மொடக்குறிச்சி தொகுதிகளில் ஒன்றை வழங்க பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்பட்டது.

    Annamaalai

    அண்ணாமலை 2021ல் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க.வின் இளங்கோவிடம் சுமார் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ‘என் மண் என் மக்கள்’ பயணத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்த அவர், பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படுகிறார். 2020ல் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது பாஜகவில் இணைந்த அவர், விரைவில் மாநிலத் தலைவராக உயர்ந்தார். 2025 ஏப்ரல் வரை அந்தப் பதவியில் இருந்து விலகினார்.

    தற்போது அண்ணாமலை புதுச்சேரிக்குப் பிறகு கேரளாவில் பிரசாரம் செய்து வருகிறார். தேர்தலில் போட்டியிடாமல் ஐந்து மாநிலங்களில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அண்ணாமலை போட்டியிடாதது அவரது ஆதரவாளர்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பிரதமர் மோடி நடத்தும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தேர்தலில் போட்டியிடாதது அண்ணாமலைக்கு கட்சியில் பின்னடைவை ஏற்படுத்துமா அல்லது பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது வரும் தேர்தல் முடிவுகளில் தெரியவரும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

    இதையும் படிங்க: பாஜகவில் தீவிர உள்ளடி வேலை! ஐடியாவை மாற்றிய அண்ணாமலை! கொதித்துப்போன ஆதரவாளர்கள்!

    மேலும் படிங்க
    வேட்புமனு பரிசீலனை: எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அருண்குமார் மனு நிராகரிப்பு!

    வேட்புமனு பரிசீலனை: எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அருண்குமார் மனு நிராகரிப்பு!

    தமிழ்நாடு
    இஸ்லாமிய வாக்கு வேண்டாம்..? நானா சொன்னேன்..?  ஜெயக்குமார் கடும் கண்டனம்..!!

    இஸ்லாமிய வாக்கு வேண்டாம்..? நானா சொன்னேன்..? ஜெயக்குமார் கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    கோமாவில் மொஜ்தபா கமெனி? ஈரானின் புதிய உச்ச தலைவர் குறித்து உளவுத்துறை வெளியிட்ட அதிரடி தகவல்!

    கோமாவில் மொஜ்தபா கமெனி? ஈரானின் புதிய உச்ச தலைவர் குறித்து உளவுத்துறை வெளியிட்ட அதிரடி தகவல்!

    உலகம்
    வாரிசு, பணபலம் இருந்தால் தான் சீட்..! திமுகவிலிருந்து விலகிய பி.டி. செல்வகுமார் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    வாரிசு, பணபலம் இருந்தால் தான் சீட்..! திமுகவிலிருந்து விலகிய பி.டி. செல்வகுமார் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    நெருங்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்..!! டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் லீவு..!! மதுபிரியர்கள் ஷாக்..!!

    நெருங்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்..!! டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் லீவு..!! மதுபிரியர்கள் ஷாக்..!!

    தமிழ்நாடு
    குருவாயூர் மற்றும் ராஜராஜேஸ்வரம் கோயில்களுக்கு ஆனந்த் அம்பானி வாரி வழங்கிய நன்கொடை!

    குருவாயூர் மற்றும் ராஜராஜேஸ்வரம் கோயில்களுக்கு ஆனந்த் அம்பானி வாரி வழங்கிய நன்கொடை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share