புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை அண்ணாமலை வெளியிட்டார். புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். தனது கட்சியில் இணைய வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அழைத்தார். தமிழகம் மக்களுக்காக பணியாற்ற ஆறு ஆண்டுகள் அமைந்தது பெரிய பாக்கியம் என்று தான் கருதுவதாக தெரிவித்துள்ளார். புதிய அரசியலை மாற்றியமைக்கும் அடிப்படையில் பாஜகவில் இருந்து வெளியேறுகிறேன் என்று அறிவித்தார்.
25 வயதில் கேப்டன் விஜயகாந்தின் கட்சியில் இன்டர்ன்ஷிப் செய்ய வாய்ப்பு கிடைத்தது தனது பாக்கியம் என்றார். ரஜினிகாந்துடன் நல்ல நட்பில் இருந்தேன் என்றும் டெல்லியில் இருந்து வந்த புதிய இயக்கத்தில் இணைய ரஜினி அறிவுறுத்தினார் எனவும் தெரிவித்தார். 18 ஆண்டுகளாக புதிய பாதையை உருவாக்க போராடிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அடையாளத்தை ஒருபோதும் நான் விட்டுக் கொடுத்தது கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, பாஜகவில் இருந்த போது ஒருபோதும் நான் தமிழகத்தின் நலனை விட்டுக் கொடுத்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அடையாளம் முக்கியம் என்பதால் தான் பல விதங்களில் பாஜக தலைமையுடன் பேசி இருப்பதாக கூறியுள்ளார். இந்தியன் என்ற அடையாளத்துடன் பெருமைமிகு தமிழனாகவே நான் இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டின் அடையாளத்தோடு பாஜக இருக்க வேண்டும் என்று தான் விரும்பியதாகவும் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவன் என்றும் தன்னை குறிப்பிட்டு பேசினார்.
இதையும் படிங்க: அண்ணாமலை ராஜினாமா ஏற்பு! பாஜக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு! உறுதியானது தனிக்கட்சி
அவர்களுக்கு தான் பிரச்சனையாக இருக்கக் கூடாது என்பதை 18 மாதங்களாக மிகப் பொறுமையாக எடுத்துரைத்து வந்ததாக கூறியுள்ளார். மீத்தேன், நிலக்கரி சுரங்கம், மேகதாது உள்ளிட்ட அனைத்திலும் தமிழக உரிமையை விட்டுக் கொடுத்தது கிடையாது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். கட்சியின் உண்மை தொண்டனாக உழைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அடுத்து நடக்கும் தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவுக்கு பை பை சொன்னார் அண்ணாமலை! தனிக்கட்சி விவகாரம்! 12 மணிக்கு வெளியாகும் அதிரடி அறிவிப்பு!