இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை தணிக்க அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது. இதன்பிறகு இன்று இருநாட்டு டிஜிஎம்ஓ-க்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இதன் பிறகு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றிய போது தாக்குதல் தற்காலிகமாக தான் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற ஜோன்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜமசம்பா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாகிஸ்தான் வாலாட்டினால் பதிலடி பயங்கரமாக இருக்கும் என பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த அத்துமீறல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..! உடைபடப் போகும் பாக். முக்கிய உண்மைகள்..!

காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வான் பாதுகாப்பே ஆப்ரேஷன் சிந்தூரின் பிரதான கேடயம்.. தேவைப்பட்டால் மீண்டும் ஒரு ஆபரேஷன்! முப்படை அதிகாரிகள் உறுதி..!